உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இலாம் பரினிப் பயணம்

ஆல்பர்ட் சுவைட்சர் பொது நலத்தொண்டு செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ ஆகும். ஆங்கு வாழ்ந்த நீகிரோக்கள் தீராபிணிகட்கு ஆட்பட்டு அல்ல லுற்றனர். நாகரிகம் அறியாத மக்கட்குத் தொண்டு செய்து நல்வழிப்படுத்துவது தன் கடன் எனக்கொண்டு ஆங்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். அவர்மேற் கொண்ட செலவு பற்றி அறிவோம்.

சுவைட்சர் ஆர்கன் இசைப்பதன் வழியாக ஒரு தொகை சேர்த்திருந்தார். நூல் வெளியீட்டாலும் ஓரளவு தொகை ஈட்டி யிருந்தார். தம் சம்பளத்திலும் ஒரு பகுதியை மீதப்படுத்தி யிருந்தார். தக்கவர்களிடம் நன்கொடை வழியாலும் ஓரளவு தொகை சேர்த்தார். ஆக எவ்வுதவி இல்லாமலும் ஒரு மருத்துவ மனையை ஓரிரண்டாண்டுகள் தாமே நடத்த இயலும் என்று கணக்கிட்டறிந்தார். அதன் பின்னர்த் தம்மை மருத்துவப் பணிக்கு ஏவிய பாரிசு கிறித்தவ சங்கத்திற்கும் தம் விருப்பத்தை வெளி யிட்டார்.

கிறித்தவ சங்கத்தால் தம்மைக் கலந்து பேச வருமாறு ஆல்பர்ட்டை, தம் சமயத் சீர்திருத்த நோக்கத்தை விரும்பாத பலர் அக்குழுவில் இருப்பதால் அவர்களை நேரில் காண்பது தம் பயணத்திற்குத் தடையாகலாம் என்று எண்ணி அக்குழுவைக் காண மறுத்தார். எனினும் தனித்தனியே அவர்களைக் கண்டு கலந்து பேச ஒப்பினார். அவ்வாறே அவர்களைக் கண்டு தம் பயணத்திற்கு இசைவு பெற்றார்.

செருமணி நாட்டுப் பல்கலைக் கழக மருத்துவப் பட்டம் பெற்றவர் சுவைட்சர். அவர் பிரான்சு நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் பணி செய்யப் போகிறார். ஆகவே பிரான்சு நாட்டார் இவர் பெற்ற மருத்துவப் பட்டத்தை ஏற்று இசைவு அளிக்க வேண்டும். அவ் விசைவையும் பெற்றார். அன்றியும் அந்நாட்டவர் பலர் மனமுவந்து நன்கொடையும் வழங்கினர். பிற நாட்டவர்கள் உதவியும் கிட்டின. வை சுவைட்சர் மேற்கொள்ள இருந்த