உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

35

பணிக்குப் பேருதவியாயின. சுவைட்சர் தம் உற்றார் உறவினர் களிடத்தும், உடன் பணி புரிந்தவர்களிடத்தும் அன்பு நண்பர் களிடத்தும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார்.

சுவைட்சருக்குப் கப்பற் பயணம் புதிது தம் பணிக்கு வேண்டிய பொருள்களை எழுபது பெட்டிகளில் அடைத்துக் கப்பலில் ஏற்றிச் சென்றார். புறப்பட்ட இரண்டாம் நாளே கடலில் புயல் கிளம்பியது. கப்பலை சுழற்றி யடித்தது. பெட்டிகளைக் கட்டிவைக்காமையால் அவை சிதறி ஓடின. மூன்று நாட்கள் தொடர்ந்து புயல் வீசிற்று புயல் ஓய்ந்தபின்பே அமைதி தவழ்ந்தது. அதற்கு முன்னர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்கள் கடற் பயணம் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டின் இயற்கையமைப்பு, வெப்பதட்பம், நீகிரோவர் நிலை ஆயன பற்றியும் பலப்பல செய்திகளை விரித்துரைத்தனர். ஆப்பிரிக்காவின் வெயில் கொடுமை பற்றியும், காலை மாலைப் பொழுதுகளில் அடிக்கும் இள வெயிலால் உண்டாகும் வெயில் வாதம் பற்றியும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர். இச் செய்திகளை அனைத்தும் ஆல்பர்ட் சுவைட்சர் செய்யப்போகும் அரும்பெரும் பணிக்கு உதவுவனவாக இருந்தன.

பயணத்தின் இடையே டாக்கர் என்னும் டத்தில் சுவைட்சர் இறங்கினார். ஆங்கு அவர் கண்ட ஒரு சாட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. கரடுமுரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் ஒரு குதிரை வண்டியைக் கண்டார். வண்டி தாங்க மாட்டாத அளவுக்கு குதிரைகள் இழுக்க மாட்டாத அளவுக்கு - பாரம் ஏற்றப் பெற்றிருந்தது. ஆயினும் வண்டியில் நீகிரோக்கள் இருவர் அமர்ந்து கொண்டு குதிரைகளை அடித்துத் துன்புறுத்திப் படாப்பாடு படுத்தினர். இதனைக் கண்ட சுவைட்சர் அங்கே சென்று அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னிருந்து தள்ளினார். வண்டி எளிதாகச் சென்றது. ஆப்பிரிக்காவில் செய்ய இருந்த தம் தொண்டைத் தொடங்கி விட்டார் சுவைட்சர். தொண்டு செய்வர்க்கு இவ்விடம் - இக்காலம் இப்பணி என உண்டா?

66

‘ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல்”

என்பது தானே அறநெறி.