உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

டாக்காவிம் இருந்து புறப்பட்ட கப்பல் லோபசு என்னும் இடத்தைச் சேர்ந்தது. அங்கிருந்த சுங்கச்சாவடிகள் பொருட்கள் தணிக்கை செய்து வரி விதிக்கப் பெற்றன. அதற்கு மேல் ஓகேவே ஆற்றில் படகு வழியாகப் பயணப் தொடங்கியது. படகுப் பயணம் இலாம்பரினி வரைக்கும் உண்டு. அதற்குப் பின்னர், கிறித்தவ சங்கத்தின் பகுதிக்குத் தோணியில்தான் செல்ல வேண்டும். இலாம் பரினியை அடைந்த சுவைட்சர் பொருள்களைப் படகில் இருந்து தோணிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அந்நிலையில் கிறித்தவ சங்கஞ் சார்ந்த இரண்டு தோணிகள் விரைந்து வந்து, தங்கட்கு உதவ வந்திருக்கும் மருத்துவரையும், அவர் இல்லக் கிழத்தியாரையும் வரவேற்று வாழ்த்தின. பொருள்களை ஒரு தோணியில் ஏற்றி வைத்துத் தாமும் தம் மனைவியாரும் ஒரு தோணியில் அமர்ந்து தாம் சேர வேண்டிய கிறித்தவ சங்கத்தைச் சேர்ந்தனர்.

எடுத்துக்கொண்ட பணி பெரிது. பணி செய்யப் புகுந்த நாடு தொலைவானது; பழக்கப் படாதது; அந்நாட்டு மொழியோ தாம் அறியாதது.போக்குவரவு முதலாய எந்த வாய்ப்புக்களும் இல்லாதது. எனினும் 'துணிவே துணை' 'தொண்டே கடவுட் பணி' எனக் கொண்ட சுவைட்சர் தாம் செய்யப்போகும் பணிக்குத் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தார். இத்தகையரே அருளாளர் என்பதில் ஐயமில்லை!