உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த

மருத்துவப்பணி

சுவைட்சர் தம் முப்பதாவது அகவையில் எந்தப் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அந்தப் பொதுத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தினார். அத்தொண்டு அல்லல் மிக்கது. ஆயினும் அயராது பாடுபட்டு அரிய வெற்றி சுவைட்சரின் பேருள்ளத்திற்கும் பெருந்திறத்திற்கும் சான்றாகும்.

நீகிரோவர்க்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற சுவைட்சருக்கு அவர்கள் மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதற்காக அவரிடம் மருத்துவம் செய்யவந்த யோசேப்பு என்பவனை மொழிபெயர்ப்பாளியாக வைத்துக் கொண்டார். அவன் ஆங்கிலேயர் ஒருவர்க்குச் சமையற்காரனாக இருந்தவன். ஆதலால் அவனுக்கு மொழி பெயர்ப்புப்பணி ஏற்றதாயிருந்தது. இப்பணியில் அவன் நெடுநாள் நிலைத்திருக்கவும் செய்தான்.

மருத்துவ மனைக்கு வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும். ஆகவே உடனடியாகப் பார்க்க வேண்டிய நோயாளர்கள் மட்டுமே முதற்கண் தம்மிடம் வருமாறு பக்கங்களில் பறையறைந்து அழைக்கச் செய்தார். ஆனால் எல்லா நோயாளர்களுமே கூடிவிட்டனர். வீட்டு வாயிலில் தான் மருத்துவ ஆய்வு நடத்த வேண்டியதாயிற்று. அங்கு வெயில் பட்டாலே வெயில்வாதம் உண்டாகி அல்லல் படுத்தும் வீட்டு நிழலில் மருத்துவ ஆய்வு செய்யவும், மரநிழலில் தங்கவும் முடிந்தது.

ஒவ்வொரு நாளும் நோயாளிகள் வந்ததும் அவர்களை உட்காரவைத்து 'மருத்துவர் மனைக்குப் பக்கத்தில் எச்சில் துப்பக்கூடாது.கூச்சல் போடக்கூடாது. தங்களுக்கு ஒருநாளுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவர வேண்டும். மருத்துவர் இசைவு இல்லாமல் இரவில் எவரும் தங்கக்கூடாது. மருந்துதரும் சீசாக்களும் டப்பாக்களும் திருப்பித்தரப்பெற்ற வேண்டும். மாத நடுவில் கப்பல் வந்து திரும்பும்வரை உடனடி நோயாளர்கள் மட்டுமே பார்க்கப்