உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

பெறுவர் என்னும் செய்திகளை உரக்கப் படிப்பர். இச்செய்திகள் அவர்கள் வழியாக மற்றவர்கட்கும் பரவும்.

ஒவ்வொரு நாளும் காலை எட்டுமணிக்கே மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடும். நண்பகல் பன்னிரண்டரை மணி உணவுவேளை. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணிவரை மீண்டும் மருத்துவம் செய்யப்படும். அன்று பார்க்கப்படாமல் எஞ்சிய நோயாளர் மறுநாள் பார்க்கப்படுவர்.

நோயாளர் ஒவ்வொருவர்க்கும் வட்டமான ஓரட்டை கொடுக்கப்படும். அவ்வட்டையில் மருத்துவரின் பதிவுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள நோயாளியின் எண் இருக்கும். அதன் துணை யால் அவன் நிலை, மருந்து முதலியவற்றைக் கேட்டுப் பொழுதை வீணாக்காமல் மருந்து கொடுக்க வாய்ப்பாக இருந்தது. அவனிடம் கொடுத்துத்திரும்பப் பெற வேண்டிய சீசா, டப்பா முதலியவையும் அதில் குறிக்கப் பெற்றிருந்தன. ஆதலால் அவற்றைத் திரும்பப் பெற உதவியாக இருந்தது.

நாள்தோறும் முப்பது நாற்பது நோயாளர் மருத்துவ மனைக்கு வந்தனர். மலேரியாக் காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையீரல் கோளாறு, வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் அங்கே மிகுதியாக இருந்தன. சொறி சிரங்கும் மிகுதி. குருதி கொட்டும் வரை சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இந்நோய்க்கு உடலைக் குளிப்பாட்டி ஒருவகை மருந்தைப்பூசி விரைவில் குணப்படுத்தினார், சுவைட்சர்.

நுரையீரல் நோய் பலருக்கு இருந்தது. அந்நோய்க்கு மருத்துவம் செய்வது ஐரோப்பாவைவிட எளிதாகவும், விரைந்து பயன் தருவதாகவும் இருந்தது. கிறுக்கர் எண்ணிக்கை ஆப்பிரிக் காவில் குறைவு. ஐந்தாறு கிறுக்கர்களுக்குச் சுவைட்சர் மருத்துவம் செய்தார். அவர்கட்கு மருத்துவம் செய்வது கடினமாக இருந்தது. நஞ்சு, ஊட்டுவதாலும் சிலரைக் கிறுக்கர்கள் ஆக்கும் கொடுமை ஆப்பிரிக்காவில் இருந்தது. இவ்வகையால் கிறுக்கர் ஆகியவரை எம் மருத்தாலும் சரிப்படுத்த முடிவதில்லை.

காங்கோவில் பெருவாரியாக இருந்த நோய்களுள் தூங்கு நோய் என்பதொன்று உகண்டா என்னும் பகுதியில் தூங்கு நோய் பரவிய மூன்றாண்டுகளில், ஆங்கிருந்த மூன்று நூறாயிரம் பேர்களில் இரண்டு நூறாயிரம் பேர்கள் இறந்தனர். காய்ச்சலுடன் தொடங்கும் இந்நோய், தூக்கத்தில் கொண்டு வந்து வைக்கும். பொறுக்க முடியாத தலைவலி யுண்டாகும். மூளைக் கோளாறும்