உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

39

உண்டாகிவிடும். இறுதி நிலையில் வரும் தூக்கத்தால் மயக்கம் உண்டாகும். உடல் மரத்துப்போகும். சாவும் எளிதில் வராது. பிழைக்கவும் முடியாது. இத்தொற்று நோய் மருத்துவத்திற்கு ஒதுங்கலாக ஒருவிடுதி வேண்டியதாயிற்று. ஆகவே சுவைட்சரின் பெரும் பொருளையும் பொழுதையும் இந்நோய் கவர்ந்து கொள்ளத் தவறவில்லை. எதற்கும் அயராதவராயிற்றே சுவைட்சர்! அதனால் வெற்றி கண்டார்.

1914ஆம் ஆண்டில் உலகப்போர் தொடங்கியது. அதன் விளைவதென்ன? அருட் பணிக்கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்ட சுவைட்சரும் அவர் மனைவியாரும் சிறை செய்யப் பெற்றனர். செருமணி நாட்டைச் சேர்ந்தவர் சுவைட்சர். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்க்குத் தொண்டு செய்யலாமா? இரண்டும் பகை நாடு ஆயிற்றே! என்னே அரசியல்!

சுவைட்சரும் அவர் மனைவியாரும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும், மருத்துவப் பணி புரியக்கூடாது என்றும் தடை விதிக்கப் பெற்றனர். இவற்றுள், மருத்துவம் செய்யக்கூடாது என்பதே துயரூட்டியது. ஐரோப்பியர் நீகிரோவர் ஆகிய இருசார்பினருமே இத்தடையை எதிர்த்தனர். இவர் தம் ஆசிரியர் சார்னர்சு விடார் தடையை நீக்க முயன்று வென்றார். மீண்டும் மருத்துவப்பணியைத் தொடர்ந்தார்.

போரின் விளைவால் வெளிநாடுகளில் இருந்து பணவரவும் மருந்து வரவும் நின்றன. உள்நாட்டில் அவ்வப்போது சிறிதளவு வந்த வருவாயும் நின்றது. மனைவியார் உடல்நிலை சீர்கெட்டது. ஒன்றின்மேல் ஒன்றாகத் துயர் மேலிட்டன. நாலறை யாண்டுகள் பணி செய்ததற்குப் பயனாகப் பெற்று ஐரோப்பாவுக்குக் கப்பலேறினர். நஞ்சையூட்டு போதினும் அஞ்சாதவரே தொண்டர் அல்லரோ!

ஆப்பிரிக்காவில் சுவைட்சர் செய்த உயிரிரக்கப் பணிகள் சொல்லொண்ணாய் பெருமையுடையன. அவ்வேளையில் அவர் பட்ட அல்லல்களும் சொல்லொண்ணாதவை. ஆனால் அவற்றை அவர் அல்லலாகக் கருதினார் அல்லர்.

66

"அல்லல் அருளாள்வார்க் கில்லை வெளிவழகு மல்லல்மா ஓலாம் கரி” என்பது பொதுமறை.