உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீகிரோவர் வாழ்க்கை முறை

ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகள் ஒன்று ஓகேவே அவ்வாறு எழுநூறு கல் நீளமுடையது. அவ்வாற்றின் பகுதியில் எட்டுக் குழுக்களைச் சேர்ந்த நீகிரோவர் முன்னர் வாழ்ந்தனர். அவர்களுள் கலோவா என்னும் ஒரு குழுவினரே எஞ்சினர். மனிதரைக் கொன்று தின்னும் ஒரு கூட்டத்தாரும் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி உயிர்க் கொலையைக் தொடங்கி யுள்ளனர்.

நீகிரோவர் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் வாழைப் பழம். மரவள்ளிக் கிழங்கு ஆகியவையே. அங்கே நெல் முதலிய தானியங்கள் விளைவதில்லை. வேறு நாடுகளில் இருந்தே தானியங் களும், பாலும் அரிசியும் பெறுகின்றன.

நீகிரோவர்களும் சிலர் முகமதியர் சிலர் கிறித்தவர். எச்சமயம் தழுவினவராக இருந்தாலும் தம் பழைய பழக்கவழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் விடுவதில்லை. நாகரிமற்றவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், காட்டு வாழ்வினராகவும் இருப்பதால் இவர்களை நோய்கள் வளைத்துச் சூறையிடுகின்றன. நோய்கள் வந்தால் சாவது அன்றி வேறு வகையில்லை.

நீகிரோக்களில் மந்திரவாதிகள் உண்டு. நோயைத் தீர்க்க வல்லவன் மந்திரவாதியே என்று நம்புகிறார்கள். நோயைத் தீர்ப்பவனால், அதை உண்டாக்கவும் முடியும் என்று கருதி மந்திரவாதிகட்கு மிக அஞ்சுவர். சுவட்சரையும் மந்திரவாதி என்றே கருதினர். நோய்களைத் தீர்த்தால் அல்லவா! மருத்துவர் தரும் அடையாள அட்டையை மந்திரத் தகடாகக் கருதி அதைத் தவறவிடுவது இல்லை. அடிமைக்கு அடையாளமாகத் தந்த அட்டையுடன் இவ்வட்டையையும் சேர்த்துக் கட்டிக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வர். மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை அறியார். எத்தனை முறை கூறினால் புரியார். பல நாட்களுக்குப் பல வேளைகளுக்குத் தந்த மருந்தை ஒரே முறையில் சாப்பிட்டு விடுவதுண்டு. பூச்சு மருந்தை உட்கொண்டு விடுவதும், உட்கொள்ளும் மருந்தைப் பூசிக் கொள்வதும் எளிய காட்சி!