உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

41

தங்களுக்கு வேண்டாதவர்களை எவ்வழி கொண்டும் ஒழித்து விடுவது ஆப்பிரிக்கர் இயல்பு. தேடிப் பிடித்து நஞ்சு வைத்து விடுவர். தங்களை மதிக்காதவர், மறைவாக வைத்திருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியவர் ஆயவரையும் நஞ்சூட்டி விடுவர். தங்களுக்கு நஞ்சுவைத்து விடுவர் என்று ஒவ்வொரு நீகிரோவும் அஞ்சுவதுடன், மந்திரத் தகட்டுக்கு மிக அஞ்சுவர். ஆவதும் அழிவதும் மந்திரத் தகட்டால்தான் நடக்கிறது என்பது அவர் களின் திட்டவட்டமான முடிவு. சரியான மந்திரத்தகடு வைத்திருப்பவன் எவனை அழிக்க விரும்பினாலும் அழித்து விடலாம். என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்பது அவர்களின் அசையாத உறுதிப்பாடு தோட்டத்தைக் காப்பதற்கும் மந்திர சீசாக்களை மரத்தில் கட்டி வைப்பர். மந்திரவாதி அப்பகுதியில் திரிவதாக எவரேனும் பரப்பி விட்டால் எவரும் வெளியேறாமல் வீட்டுள் அடைந்து கிடப்பர். பலநாட்கள் பட்டினியாகவும் வீட்டுள் இருப்பர்.ஏனெனில், மந்திரவாதி மண்டைச்சில்லை எடுத்து மந்திரத் தகடு செய்து விடுவானாம்.

புகையிலைக்கு நீகிரோவர் கொடுக்கும் மதிப்பு அளவிட முடியாதது.இங்கு வரும் அமெரிக்கப் புகையிலை மிகக் காரமானது. புகையிலையைச் சில்லறைப்போலப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது புகையிலை தருவதாகச் சொன்னால் பலவேலைகள் நீகிரோவர் செய்யக் காத்திருப்பர். ஒருவரிடம் இருந்து ஒருவராகச் சுக்கானை வாங்கி மாற்றி மாற்றிப் புகைத்துக் கொண்டிருப்பர்.

நீகிரோ வேலைக்காரர்களில் மிக நல்லவனைக் கூட நம்ப முடியாது. எதனையும் அவர்கள் கைக்கு அகப்படாதவாறு பூட்டிக் காக்க வேண்டும். அல்லது, வேலை செய்யும் போது உடன் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் பெருமைக் குறைவாக எண்ணுவது இல்லை. யாக இல்லாதவர் பொருளை எடுத்துக் கொள்வது தவறு என்று அவர்கள் எண்ணுவதே இல்லை! ‘பூட்டி வைக்காதது கம்பி நீட்டிவிடும் என்பது அவர்கள் பழமொழி.

இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழிலுக்குச் சென்ற போது ஒருவன் இறந்துவிட்டால் இறந்தவனுக்குப் பொறுப்பாளி உடன் ருந்தவனே என்று குற்றஞ் சாட்டுவதும் பழிவாங்குவதும் நீகிரோவர் நீதி. நீதிக்காக எவ்வளவு கடுந்தண்டனையையும் தாங்கிக் கொள்வர். தவறு செய்து தண்டனை கிடைக்கவில்லை என்றால் தங்களால் தவறு செய்யப்பட்டவர்கள் அறிவற்றவர்கள்