உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

என்று நினைப்பர்.

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

நீகிரோவர் சோம்பேறிகள் அல்லர். ஓய்வு ஒழிவின்றி வேலை செய்வர். இயற்கையின் குழந்தைகளாக அவர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தேவை அளவுக்குகே உழைக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குறைவு. அத் தேவைகள் இயற்கையில் எளிமையாகக் கிடைக்கின்றன. அதனால் கூலிவேலை செய்து பொருள் திரட்ட வேண்டிய இன்றியமையாமை இல்லை. திருமணம் செய்தல், துணி எடுத்தல், புகையிலை வாங்குதல் இவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவுக்குகே கூலிவேலை செய்வர். வேண்டிய அளவு தொகை கிடைத்துவிட்டால் வேலைக்குப் போக மாட்டான். ஆதலால் அவரைச் சோம்பேறி என்று சொல்ல முடீயாது.

நீகிரோவர் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறைகள் ஆகியன பற்றி ஆராய்ச்சிகள் செய்து நூலாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் சுவைட்சர். நீகிரோவர் மேல் எக்குற்றத் தையும் ஏற்றமுடியாது. அவர்கள் அறியாமை அத்தகையது! அறிவுடைய கூட்டம் அக்கறை காட்டி வளர்க்காமையே குற்றம் என்பதே உண்மை.