உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில்

ஆல்பர்ட் சுவைட்சர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்களுள் ஒன்று கன்னிப் பெருங்காட்டின் கங்கிலே என்பதாம். ஆப்பிரிக்காவுக்குச் சென்று தாம் செய்த பணி குறித்தும், அங்குச் சென்றதால் உண்டாய பட்டறிவு குறித்தும் விரித்தெழுதி யுள்ளார். அவர் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கம் வருமாறு.

"நாலரை யாண்டுகளாக நான் பெற்ற பட்டறிவு இங்கு வந்து பணிசெய்ய வேண்டு என்று நான் செய்த திட்டம் சரியானது என்பதை மெய்ப்பிக்கிறது. இயற்கை வாழ்வினராகிய நீகிரோக்கர் நம்மைப்போல் கொடிய நோய்களில் நலிவடையார்” என்று என் திட்டத்தைத் தடுக்குமாறு கூறிய நண்பர்களின் உரை தவறானது என்பது எனக்குத் தெளிவாயிற்று.

'மற்றை இடங்களைப் போலவே இங்கும் கொடு நோய்கள் உள்ளன. ஐரோப்பியரே கொண்டு வந்தனர். நாகரிகமுறாது இயற்கையின் மடியில் வாழும் இவர்கள் நம்மைப் போலவே நோய்த்துயர் படுகிறார்கள். மருத்துவ உதவி பத்தாண்டுகளுக்கு அறவே நமக்கு இல்லை என்றால் நம் குடும்ப வரலாறு என்னாகும்? இத்துயர் நீகிரோவர்க்கும் உண்டு. நாகரிகம் படைத்த நாம் நம் உறக்கம் நீங்கி நம் கடமையை உணரவேண்டும்.

'தொலையிடங்களிலுள்ள நோயாளர்க்குப் பாடுபடுவதே என் கடன். இறைவன் பெயரால் அனைவர் உதவியையும் வேண்டு கிறேன். நீகிரோவின் தொல்லைகளை அகற்றுதல் நற்பணி, என்பது மட்டுமன்று! நம் தீராக் கடடையும் ஆகும்.

'இறைவன் வழியை பின்பற்றுவராகத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பியர் இந்நாட்டைக் கண்டு பிடித்தது அழிவு செய்வதற்காகவே? இவர்கள் ஆளும் பொறுப்பு ஏற்ற பின்னரும் பலர் இறந்தனர். இறந்து கொண்டு இருக்கின்றனர்; இருப்பவர் நிலையோ மிகச் சீர்கெட்டு வருகிறது. ஐரோப்பியர் செய்துவரும்