உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

கேடுகளாலேயே இவை நிகழ்கின்றன. இவர்களுக்குப் பழக்கிவிட்ட குடிகளும், பரவவிட்ட நோய்களும் சீர்கேட்டுக்கு அடிப்படை.

'நாம் நீகிரோவர்க்குச் செய்யும் நன்மை நல்லெண்ணத்தால் செய்வதாகக் கொள்ளக் கூடாது. நாம் செய்த கொடுமைகளை ஓரளவு ஈடு செய்வதற்கே ஆகும். ஆளுகின்ற அரசு பல மருத்துவர் களை அனுப்ப வேண்டும். சமூகமும், தனிப்பட்டோரும் ஈடுபட்டாதல் வேண்டும். தாங்கள் செய்யும் நன்மையால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்கட்கு ஒரு பெரிய பரிசாக திகழும்.

நீகிரோவர் பொருளைப் பெற்று நாம் வாழ்க்கை நடத்தவும், பணி செய்யவும் இயலாது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் வாய்ப்புக் களை உண்டாக்கித் தரவேண்டும். இஃது ஒவ்வொருவரின் தலையாய் கடமையாகும்.

நோய்த்துயர் இன்னதென்ன அறிந்த கூட்டத்தாரே முதற்கண் இதற்கு உதவ முன்வரவேண்டும். நோய் படுத்தும் பாட்டையும் அல்லலையும் அவரறிவர். நோயால் உண்டாம் துயர் தீரப்பெற்ற ஒருவன் தன்னைப் போலவே பிறனும் அத்துயரில் இருந்து விடுபடுதற்கு உதவுவானாக. இத்தகைவனே குடியேற்ற நாட்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தக்க பொறுப்புடையவன் ஆவன். இக்கொள்கையை உலகம் ஒரு நாள் ஏற்றே தீரும். ஏனெனில் அறிவுக்கும், உணர்வுக்கும் பொருந்திய மறுக்க முடியாத உண்மை இது.

என் உடல் நிலை 1918 முதல் குன்றியது. இரண்டு 'அறுவை' யால் குணம் பெறமுடிந்தது. பல இடங்களுக்குச் சென்று சொற் பொழிவு செய்ததாலும் ஆர்கன் இசைத்ததாலும் போர்க்காலத்தில் பட்ட கடனைத் தீர்த்தாயிற்று. தொல்லையிலும் தொடர்ந்து இம்மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை எனக் கொள்கிறேன்.

"போரின் விளைவால் வேண்டிய பொருள்பெற முடிய வில்லை. மருந்தின் விலையோ மும்மடங்கு ஆயிற்று. இவற்றைக் கருதி, யான் சோர்வடைய வில்லை. நான் அடையும் தொல்லைகள் வலிமையூட்டுகின்றன. மக்கட் கூட்டம் உதவும் என்ற எதிர்கால நம்பிக்கையே மிகுகின்றது. நோயில் இருந்து விடுபட்ட பலர் பிறரும் நோயில் இருந்து விடுபட உதவுவாராக. வேறுபல மருத்து வரும் இப்பணிக்கு வருவாராக!