உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர்

உலகப் போரின்போது போர்க் கைதியாக்கப் பெற்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு வரப்பெற்ற சுவைட்சர் போர்ட்டோ, கெரேசன், செயிண்ட் ரெமி முதலிய இடங்களில் சிறைவைக்கப் பெற்றார். இவரும் இவர் மனைவியாரும் உடல் நலக்குறைவு உற்றனர்.1918ஆம் ஆண்டு சூலைத் திங்களில் விடுதலை பெற்றார். சூரிச் நகருக்குச் சென்று, டிராசுபர்க்கை அடைந்தார்.

சுவைட்சர் தந்தையாரைக் காண விரும்பினார். அவர் இருந்த கன்சுபர்க்' போர்க்களப் பகுதியாக இருந்ததால் இயன்று இசைவு பெற்றே போய்க் கண்டார். போர் அழிபாட்டையும் பஞ்சக் கொடுமையையும் நேரில் கண்டு உருகினார். தம் சொந்த ஊரில் தங்குவதால் தமக்கிருந்த காய்ச்சலையும், களைப்பையும் போக்கலாம் எனக் கருதினார். ஆனால் உடல்நிலை மிகச் சீர்கெட்டுக்கொண்டே வந்தது. ஆகவே மனைவியாருடன் டிராசுபர்க்குக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார்.

உடல் நலம் பெற்றதும் பணிசெய்வதை நாடினார் சுவைட்சர். மருத்துவப் பணியும், சமய போதனைப் பணியும் டிராசுபர்க்கில் கிடைத்தன. போர்க் கொடுமையால் செருமனியில் அல்லல் படுபவர்க்கு அவ்வப்போது உணவுப்பொருள் அனுப்பி உதவினார். தம் பணிகளின் இடையே 'நாகரிகமும் தத்துவமும்' என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி முடித்தார்.

1919இல் பார்சலேனா என்னும் இடத்தில் ஆர்கன் வாசிக்க அழைப்பு வந்தது. சுவீடனைச் சேர்ந்த உப்சலா பல்கலைக் கழகத்தில் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்பு வந்தது. இவ்வழைப்புக்களால் தம்மை உலகம் மறந்து விடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அத்துறைகளில் தொண்டு செய்தற்கு வாய்ப்பு உண்டு என்று மகிழ்ந்தார். ஆண்டுகளாகத் தம் மனத்துக் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படுமாறு 'உலகம்