உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

47

உண்டு என்ற தத்துவக் கொள்கையும் ஒழுக்க நெறியும்' என்னும் பொருள்பற்றி உப்சலாச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

போர் மூண்டதற்குப் பின்னர் இலாம்பரினியில் மருத்துவ மனைநடத்துதற்காகப் பட்டிருந்த கடனை எவ்வாறு தீர்ப்பது என ஏங்கிக் கொண்டிருந்தார். சுவீடனில் இருக்கும் போதும் அவருக்கு இவ்வெண்ணம் இருந்தது. இதை அறிந்து இவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த பெருமகனார் ஆர்கன் இசைத்தும் சொற்பொழி வாற்றியும் பணம் திரட்டலாம் என வழி கூறினார். அவ்வுரையை ஏற்றுக்கொண்ட சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அமைந்த மருத்துவமனை குறித்துப் பேசினார்; ஆர்கன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்நாட்டை விட்டுப் புறப்படும்போது தாம் பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும் அளவுக்குச் செல்வம் சேர்ந்து விட்டது. மீண்டும் ஆப்பிரிக்கா சென்று மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளலாம் என்று முடிவு செய்தற்கும் தூண்டியது. ஆக சுவீடன் வாழ்வு பலவகைகளிலும் சுவைட்சருக்கு மகிழ்ச்சியாயிற்று.

உப்சலாவில் இருந்த பதிப்பகத்தார் சுவைட்சர் நடத்திய மருத்துவமனை குறித்து ஒரு நூல் இயற்றித் தருமாறு வேண்டினர். அதனால் 'கன்னிப் பெருங்காட்டின் கங்கில்' என்னும் நூலை இயற்றினார். அந்நூல் பல ஐரோப்பிய மொழிகளில் உடனே பெயர்க்கப்பெற்று நல்ல வருவாய் தந்தது.

சொற்பொழிவாலும் ஆர்கன் இசையாலும் பணம் தேடமுடியும் என்னும் துணிவால் தாம் ஏற்றிருந்த பணிகளை விடுத்தார். மனைவியையும், தமக்குப் பிறந்திருந்த ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றார். அங்கே போய் நாகரிகமும் தத்துவமும் என்னும் நூலை எழுதத் திட்டமிட்டார். எனினும் சொற்பொழிவு, ஆர்கன் சை அழைப்புக்கள் மிகுதியாயின. பொருள் ஈட்ட வாய்ப்பு என்று அவற்றில் மிக ஈடுபட்டார். சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல மேடைகளில் இசை மீட்டினார். அதன்பின் டென்மார்க், செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறு அவர் எண்ணிய எண்ணங்கள் இனிது நிறைவேறிக்கொண்டு வந்தன.