உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

1913இல் இலாம்பரினியில் பணியாற்றச் செல்லுங்கால், ஆசிரியத் தொழில், இசை ஈடுபாடு ஆகியவற்றை விட்டுவிட முடிவு கட்டினார். பிறரிடம் பொருளை எதிர்பார்க்கக்கூடாது என்றும் திட்டமிட்டார். இவ்வனைத்தும் பொது நலம் கருதி மீண்டும் மேற்கொள்ளப் பெற்றன. இறைவன் திருவருள் என்றே இவற்றில் மீண்டும் ஈடுபட்டார். இறைவன் வழிகாட்டுதல் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கும் என்னும் குறிக்கோளு டையவர்கள் பெருமக்கள்! அவர்கள் வழி தூயது! துலக்கமானது! உலகுக்கு நலம் பயப்பது! அவர்கள் வழி வாழ்வதாக!