உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அறப்போர்

ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உண்டாகும் சண்டையே போர் எனப்படுகிறது. அப்போர் மறப்போர் அல்லது வீரப்போர் எனப் பெயர் பெறும். அம்மப்போரையும் அறப்போர் ஆக்கிய பெருமை பழந்தமிழர் உடைமையாம். அதனை இக் கட்டுரைக்கண் காண்போம்.

காலமும் இடமும் குறித்துக் களப்போரில் இறங்குவது பழந்தமிழர் போர்ப் பண்பாடு. அவர்கள் போரில் இறங்குமுன் பசுக்களும், பசுக்களை ஒத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளர்களும், மக்கட்பேறு இல்லதவர்களும் பாதுகாப்பான டங்களைச் சேருங்கள், நாங்கள் போர் செய்யப் போகின்றோம் என்று கூறிப் பறை முழக்குவர். இச்செய்தியை அறிய மாட்டாத பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து பாதுகாப்புச் செய்வர். அதன் பின்னரே போர் தொடங்குவர். "மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும்" என்பதற்கு இச்செய்தி சான்றாம்.

போர் நிகழும்போதும், 'மடித்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படை இழுந்தோனையும் ஒத்த படை எடாதோனையும்" கொல்லாது போக விடுதல் வேண்டும் என்னும் அறமுறை வீரர்களால் மிகப் போற்றப் பெற்றது. இவ்வாறு அறப்போர்நிகழ்த்திய வீரவேந்தர்களுள் ஒருவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

என்பவன்.

வழுதி பலப்பலவேள்விகளை விரும்பிச் செய்தவன். மாற்றார்கள் எவ்வளவு முயன்றும் தழுவிக் கொள்ள முடியாத மதிற் சிகரங்களைக் கொண்டவன். ஆகவே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயர் பெற்றான். அப்பெரு மகனைப் பாடிய பெரும்புலவர் நெட்டிமையார் என்பர். அவர் வழுதியை நேரில் கண்டு அவன் செய்யும் அறப்போரை அழகுபெறக் கூறி வாழ்த்துகிறார்.