உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பெற்ற பரிசில்

பூவை நாடிச் செல்லும் தேனீ, பழமரம் நாடிச் செல்லும் பறவை. அவற்றைப் போல் இரவலர் ஈவாரைத் தேடிச் செல்வர். அவ்வாறு, இல்லை என்று இரந்து வருவாரை வரவேற்றுப் போற்றிய பெருமக்களுள் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் ஒருவன்.

கடுங்கோ, சேரநாட்டு வேந்தன். பாலை என்னும் அகத்திணை பாடுவதில் தேர்ந்தவன். அவனைப் பாடும் பேறு பெற்றார் இளவெயினி என்னும் பெயருடைய புலவர் பெருமாட்டி. இளவெயினி எயினி என்பவருக்குத்தங்கையாக இருந்தார். அவள் தாய் பேய்மகள் என்னும் பெயருடையவர். ஆகவே பேய்மகள் இளவெயினி எனப்பட்டார். அவர் பாலைபாடிய பெருங்கடுங் கோவைப் பாடினார்; பரிசில் பெற்றார்.

சேரனைப் பாடக் கருதிய புலவர் இளவெயினிக்குச் சேர நாட்டின் நினைவு தோன்றியது அந்நாட்டுத் தலைநகராம் வஞ்சி முன்னின்றது. அவ்வஞ்சி மாநகரில் வாழும் வஞ்சிக்கொடி போன்ற மகளிர்நினைவில் வந்தனர்; அன்னார் ஆன்பொருநை ஆற்றிலே விளையாடும் மணல் விளையாட்டு முன்னின்றது. அண்மையில் போருக்குச் சென்று வெற்றியுடன் திரும்பிய வேந்தனது படைத் திறமும் கொடைத்திறமும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன இக்கருத்துக்களை யெல்லாம் தண்டமிழ்ப் பாமாலையாக்கிப் பாலைபாடிய கோவுக்குச் சூட்டினார் இளவெயினி.

"மெல்லிய மயிரையுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலங்களையும் உடைய இளைய பெண்கள் மணலில்கோடு கிழித்து உண்டாக்கிய பாவைக்குப் பூக்களைச் சூட்டி விளையாடியும் தண்பொருநை ஆற்றிலே வீழ்ந்து நீர் விளையாட்டு நிகழ்த்தியும் களிப்படையும் வளமை வாய்ந்தது வஞ்சி மாநகர். அவ்வஞ்சி மாநகரின் வேந்தன் சேரமான் அவன் பகைவரின் அரண்களைக் கைக்கொண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வல்லாளன். அவர்களைப் பாடிச் சென்ற பாடினி மாற்றுயர்ந்த பொன்னால் ஆகிய அணிகலங்களைப் பெற்றாள்.