உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

அவள் பாட்டுக்கு ஏற்பத் தாளக்கட்டு விடாமல் யாழிசைத்த பாணர் வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூக்களைப் பெற்றான். அவர்கள் பெற்ற பேறு என்னே!" என் று வியந்து பாராடினாள் இளவெயினி.

று

கடுங்கோவின் முன்னர் நின்று இவரிவர் இன்ன இன்ன பெற்றார்! யான் எதுவும் பெற்றிலேன்; இவர் இவர்க்கு இன்ன இன்ன நீ வழங்கினை; எனக்கு எதுவும் நீ வழங்கவில்லை என்று குறிப்பாக அறிவுறுத்தினார். வள்ளலின் கை தாழ்க்குமா? அள்ளி அள்ளி வழங்கியது பாடிய எயினி பரிசிலால் மகிழ்ந்தாள்.

"பாடுதல் எமக்கு எளிது; ஆனால் பாடல் நயமறிந்து பரிசு வழங்குவதே அரிது" என்று சங்கப் புலவர் ஒருவர் கூறினார். ஆம்! ஈகை, அரிய பண்பு; "கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று குறிக்கப்பெறும் பண்புத், "தாதா கோடிக்கொருவர்" என்று பாராட்டப் பெறும் பண்பு. அப்பண்பில் தலை நின்ற பாலை பாடிய இளங்கடுங்கோ கற்பவர் உள்ளததெல்லாம் நிற்பான் என்பது உறுதி.