உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சேரமான் புகழ்

அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை ஓரிடத்தே அமைவது அரிது. அறிவு உடையவர் இடத்துப் பண்பும், பண்பு உடையவர் டத்து அறிவும், அவ்விரண்டும் உடையவர்இடத்து ஆற்றலும் அமையக் காண்பது அரிது. அவை அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து அமைந்துவிடின் அத்தகையவர் பிறர் உள்ளங்களை எளிதில் ஆட்படுத்தி விடுவர் பாடும் புகழுக்கும்உரியவர் ஆவர். அத்தகையவருள் ஒருவனாக விளங்கினான். சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

மாந்தரஞ் சேரல் சேரர் பரம்பரையில் வந்தவன். இரும் பொறை என்பது அவன் பரம்பரைக்குரிய பட்டப் பெயர். யானையின் சிறிய கண்களைப் போன்ற கண்களை உடையவன். ஆகவே இவற்றையெல்லாம் கூட்டி, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனப்பட்டான்.

இம்மன்னவனைப் பன்முறையும் கண்டு அன்புறப் பழகினார் ஒரு புலவர் அவர் குறுங்கோழியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்தவர். ஆகவே, குறுங்கோழியூர் கிழார் என்று பிறரால் அழைக்கப்பெற்றார். அப்பெயரே தம் பெயராக அமைந்து விளங்கினார்.

கிழார் மாந்தரஞ்சேரலின் அறிவுப் பண்பிலே - பல்கலைத் திறத்திலே தம் நெஞ்சைப் பறிகொடுத்தார். விரிக்க விரிக்க விரிந்து செல்லும் பண்பு மேம்பாட்டிலே தோய்ந்து நின்றார். அவன் ஆட்சியிலே அவன் அடிசார்ந்த குடிமக்கள் அடைந்து நிற்கும் இனிய தண்ணிய வாழ்வை எண்ணி இன்புற்றார். ஆற்றல் பெருகிக் கிடந்தும் அறவழிக்கு அன்றிப் பிறவழிக்கு பயன்படுத்தாத பெருந்தகைமையைப் பெரிதும் தெளிந்தார். குறை சொல்லிக் கொண்டு எவரும் முறை வேண்டிவரும் நிலை இல்லை என்பதையும் அவ்வாறு வரினும் அக்காலையில் வேந்தன் செலுத்தும் செங்கோல் மாண்பு இத்தகையது என்பதையும் சிந்தையில் தேக்கினார். இத்தகைய அரிய தன்மைகள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்து ள்ளமையால் மக்கள் உள்ளங்களில் உண்டாக்கி இருக்கும்