உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

நல்லெண்ணத்தையும் ஆய்ந்து உணர்ந்தார். தம் கருத்தை எல்லாம் கூட்டி அதற்குப் பாட்டுருத் தந்தார்.

"வேந்தே! விரிந்த கடலின் ஆழம், பெரிய நிலத்தின் அகலம், காற்று வீசும் திசை, உருவம் அற்று நிலைபெற்ற வானம் இவற்றை எல்லாம் அறிவாற்றல் மிக்கோர் அளப்பினும் அளக்கலாம். ஆனால், அவற்றை அளந்து காணும் அறிவினராலும் நின் அன்பு, அருள், அறிவு ஆகியவற்றை அளப்பது அரிது. சோறு சமைக்கும் போது உண்டாகும் தீயின் வெப்பமும், செங்கதிரோன் வெப்பமும் அன்றி நின்குடிகட்கு வேறு வெப்பம் எதுவும் இல்லை வான வில்லைக் கண்டது அன்றி வாட்டும் கொலை வில்லைநின் மக்கள் அறியார். உழுபடை (கலப்பை) அன்றிப் பிற படைகளை அவர்கள் அறிந்தது இல்லைபிறர் மண்ணை நீ பறித்துக் கொண்டதோ இல்லை அவ்வாறே மண்ணாசை கொண்டு நின்னாட்டின் மேல் வந்தாரும் இலர். கருக்கொண்ட மகளிர் மண்ணை உண்டதை அன்றிப் பகைத்து வந்து நின் மண்ணைப் பற்றி உண்டார் இலர். நின் மதிலிலே அம்புகள் தங்கிச் செயலற்றுக் கிடக்கின்றன. அறமோ, நின் செங்கோலிலே தங்கிக் கிடக்கிறது. பழம்பறவை போயினும் புதுப்பறவை வரினும் நடுக்கம் இன்றிக் காவற்கடமை புரிகின்றனனை நீ. ஆகவே நின்கீழ்வாழும் உயிர்கள் அனைத்தும் நினக்குச் சீறுதீமையும் வருதல் கூடாதே என அஞ்சி வாழ்கின்றனர்" என்று பாராட்டினார் குறுங்கோழியூரார்.

'உள்ளதை உள்ளவாறு பாடுதல் எமக்கு எளிது' என்று காட்டினார் கிழார். 'உள்ளம் உவக்க ஈவது எனக்கு எளிது' என்று காட்டினான் சேரமான். 'ஈத்துவக்கும் இன்பம்' ஒருவர்க்கு மட்டும் அல்லவே! இருவருக்கும் உரியது தானே! வாழ்க ஈத்துவக்கும் இன்பம்.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு

99

கஈ