உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மறப்பது எப்படி?

"நின்னை எப்பிறப்பிலும் மறவாமை வேண்டும்" என்று கண்ணனிடம் வேண்டினான் கர்ணன். "என் மார்பைப் பிளந்து பார்; அங்கே நின் உருவைக் காண்பாய்" என்று சங்கப் புலவர் ஒருவர் தம் பேரன்புக்குரிய வேந்தனை நோக்கிக் கூறினார். நல்லதை மறப்பது என்பது புல்லியர் பண்பு. 'உப்பிட்டவரை உள்ளவரைநினைப்பது' உயர்ந்தோர் தகைமை அத்தகு உயர்ந்தோ ராகத் திகழ்ந்தார் ஆவூர் மூலக்கிழார்.

ஆவூரைச் சேர்ந்த புலவர் மூலங்கிழார் சோழன் கிள்ளி வளவனது வரிசை அறிந்து வழங்கும் வள்ளன்மையிலே உள்ளம் தோய்ந்தார். வாரிக் கொடுக்கும் வள்ளல் எனினும், பாடும்புலவர் தகுதி அறிந்து பாடல் தகுதி அறிந்து கொடுப்பது அரிது. அவ்வரிய திறமை எளிதில் கைவரப் பெற்றவன் கிள்ளி வளவன்.

-

கிள்ளிவளவனை அன்புற நெருங்கி வாழ்ந்த புலவர் மூலங்கிழார். நெடுநாட்கள் அவனைக் காண வாராமல் இருந்தார். அரசனுக்கு அவரைக் காணும் ஆவல் பெரிதாயிற்று; ஏக்கமாகவும் மாறிற்று. எவர் எவரையே கேட்டுக் கேட்டுச் சலித்தான். ஒரு நாள் புலவரையே நேரில் கண்டான். தன் ஆவலை எல்லாம் சேர்த்து "எம்மை நினைத்தீரோ? எந்த நாடு சென்றிருந்தீர்" என்று வினாவு முகத்தால் எம்முள்ளீர்? எந்நாட்டிடீர்?" என்றான். அதற்கு விடையாக அவன் சிறப்புக்களையெல்லாம் வடித்தெடித்த சாறாகப் பாட்டொன்று பாடினார்.

"வேந்தர் வேந்தே! மலை போன்றவை நின் இளைய வலிய யானைகள்; அவற்றின் மேலே, வானத்தில் கறை உண்டாயின் துடைப்பது போல ஓங்கி உயர்ந்த வண்ணக் கொடிகள் யானையைத் தொடர்ந்து செல்லும் படைகள் எண்ணற்கு அரியன. மன்னவனே, நீ சினந்து பார்க்கின்றோரின் இடம் அப்பார்வை மட்டிலே தீப்பற்றி எரிகின்றது நீ அன்பால் விரும்பிப் பார்ப்பவர் நாடுகள் பொன்விளையும் கழனிகளாக மாறுகின்றன.. நீ கதிரோன் இடத்தில் இருந்து நிலவொளியைப் பெற விரும்பினால் விரும்பிய வாறே பெறுவாய் அவ்வாறே நிலவில் இருந்து வெயில் உண்டாக்க