உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

வேண்டும் என்று உண்ணினாலும் நின் எண்ணம் நிறைவேறத் தவறுவது இல்லை. வேண்டியவற்றை வேண்டியவாறு முடிக்கவல்ல வீரன் நீ. ஆதலால் நின்குடை நிழற்கண் பிறந்து அந்நிழலே தஞ்சமாக வாழும் யான் நின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ? பிறநாட்டில் இருந்து நின்னை நேரில் காணாமல் வேள்வி அளவால் அறிந்தவர்களும் நின்னைப் பாராட்டி மகிழ்கின்றனர்.

66

அரசே, மக்கள் தாம் செய்த நல்வினைக்கு ஏற்றபடி வானுலகம் சென்று ஆங்குள்ள இன்பம் நுகர்வர். ஆனால் அவ்வானிலோ ஒன்றை ஈவாரும் இலர்; இல்லை என்றி வந்து இரப்பாரும் இலர். ஆதலால் அவ்வானம் செயல் இகந்து பொலி வற்றது என்றே கூற வேண்டும் எனப் புலவர் கருதுகின்றனர். ஆங்குப் பெறும் இன்பம் அனைத்தும் நின்னாட்டில் ஒருங்குபெறக் கூடும் என்றே கருதுகின்றனர். ஆகவே புலவர்கள் எங்கு இருந்தாலும் பகைவர் நாட்டில் இருந்தால்கூட நின் சோழ நாட்டையே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நான் மட்டும் நின்னை மறந்து வாழ்வேனோ? மறவேன். மறவேன்! என்றார் புலவர். தழுவிக் கொண்டான் கிள்ளி வளவன்.

செல்வக் குவியலிலே திளைப்பவன் வளவன்; பாடிப் பரிசில் பெற்று வாழ்பவர் ஆவூர் மூலங்கிழார் செல்வச் செருக்கு வறுமைத் தாழ்வு இவை ஆங்குத் தலைகாட்ட வில்லைஏன்? அன்பு தலைகாட்டியமையே காரணம். வாழ்க அன்பு வாழ்வு!

-

"அன்புற் றமர்ந்த வழக்கெனப் வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு”