உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

'நாம் வந்தபொழுது சரியில்லை' என்று தமக்குள் ஔவையார் எண்ணினார்; நாட்கள் கடந்தன; பரிசில் தருதற்கு விருப்பம் இல்லாதவன் தான் இவ்வாறு நாட்களை நீட்டிக்கிறானோ' என்னும் எண்ணம் அவருக்கு ஒரு நொடிப்பொழுது உண்டாயிற்று! மறு நொடியில் "பேதை நெஞ்சமே, என்ன நினைத்தாய்? ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் பல நாளும். ஒருவர், இருவர் என்று இல்லாமல் பலரும், முதல் நாள் போல் பரிசு பெற்றுச் செல்ல வழங்கும் வள்ளல் அதிகமானா நமக்குப் பரிசு வழங்கத் தவறுவான்? தவறான்," என்று மறு நொடியிலே எண்ணினார். மேலும் அவர் தம் எண்ணம் வளர்ந்தது.

ானா?

'அதிகமான் என்ன வறுமைக்கு ஆட்பட்டு விட் அணிகலம் அணிந்த யானைகள் அவனிடம் குறைந்து விட்டனவா அழகு நடைபோடும் தேர்களும் குதிரைகளும் குறைந்து பேயினவா? அவன் பரிசு கிடைக்கலாம்; அல்லது நாளை கிடைக்கலாம்; அல்லது காலம் நீடித்தும் கிடைக்கலாம். ஆனால் பரிசு கிடைக்கத்

தவறாது.

"யானை தன் கையில் சோற்றுத் திரளையை - கவளத்தை எடுத்து வைத்துள்ளது. அதனை உடனே தன் வாய்க்குள் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் அல்லது சற்றே பொறுத்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் வாய்க்குள் போதில் தவறுமா? தவறாது. அதுபோலவே அதிகமான் தரும் பரிசிலும் ஒருநாளும் தவறப்போவதில்லை. அவன் தரும் பரிசு நம் கையகத்தே இருக்கிறது. ஆகவே அருந்துதலில் ஏமாற்றம் கொண்ட என் நெஞ்சமே. நீ வருந்த வேண்டா! அவன் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்! அவன் எடுத்துக் கொண்ட இனிய முயற்சி எளிதில் வெற்றி தருவதாக! வாழ்வதாக அவன் முயற்சி," என்று வாழ்த்தித் தம் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

பூமாலை வாடும்; பொழுதுபோனால் மணமும் தேனும் இல்லையாகும். பாமாலையோ என்றும் வாடா மாலை; வற்றாத் தேன் மணமாலை; அம்மாலையைப் பெற்ற அதிகமான் பேறு பெற்றேன்.புகழுடலால் அதனை வாழச் செய்வன அப்பாமாலைகள்

தாமே!