உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புலவரின் வள்ளன்மை

இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவது வள்ளன்மையாம், வள்ளல் தன்மையே, வள்ளன்மை எனப்படும்.வள்ளல்களை நாடித்தேடித் திரிந்து பொருள்பெறும் இயல்புடைய புலவரே வள்ளலாகத் திகழ்ந்த பெருமித மிக்க வரலாற்றை இவண் அறிவோம்.

பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர் பெரிய குடும்பம் உடையவர்; சுற்றமும் சூழலும் மிக்கவர்; அத்தகையவரை வறுமை வாட்டாமல் விடுமா?

சித்தனாரின் மனைவியார் சீரிய பண்புகள் வாய்ந்தவர் மனைக்கு விளக்காக அமைந்தவர்; அவர்தம் அருந்திறப் பெருங் குணத்தால் அண்டை அயலார் அனைவரும் அவருக்குத் தக்க வண்ணம் ஆதரவாக இருந்தனர். குறிப்பறிந்து தாமே முன் வந்தும் பல வகையில் உதவினர்; கைம்மாற்றாகவும் வேண்டுவனவற்றை வழங்கினர்; இத்தகு நிலையிலே குடும்பம் என்னும் வண்டி ஒருவாறு உருண்டு கொண்டு இருந்தது. ஆனால், வறுமையின் வாட்டுதலைப் பிறர் எவ்வளவு நாட்கள் தாம் தடை போட்டுவிட முடியும்? சித்திரனார் குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது.

"நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கக்கூடும்; வறுமையுள் ஒருவன் உறங்க இயலாது" என்பது பொய்யாமொழி. ஆகவே வள்ளலைத் தேடிச் செல்லும் எண்ணம் சித்திரனார்க்கு எழுந்தது. யாரைக் காண்பது? பல்லைக் காட்டி மானம் இழந்து பாடித் திரிவதற்குச் சித்தரனார் உள்ளம் உடன்பட வில்லை. “குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல் யார்?" என் எண்ணினார். 'முதிரமலை தலைக் கொடையாளி குமணணே' சித்திரனார் நெஞ்சில் தோன்றினான். புலவர் முதிரமலை நோக்கி நடந்தார்.

வள்ளல்

-

-

காடும் மலையும் கடந்தார்; கால்கடுக்க நடந்தார்; நெஞ்சில் நின்ற குமணனின் நேரில் நின்றார் சித்தரனார். உள்ளார்ந்த அன்பால் வரவேற்று உவகைக் கூத்தாடினான் குமணன். நெடுநாட்கள் தன்னுடன் தங்குமாறு வலியுறுத்தினான் பொழுதெல்லாம் புதுக்