உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கவி ை

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

தையிலும், இலக்கிய ஆய்விலும் கழிந்தது புலவரோடு அளவளாவி மகிழும் இன்பம் போல வேறு இன்பம் இல்லை என்னும் கருத்துடைய குமணனன் புலவரை எளிதில் போக விடுவானா? புலவர்க்கும் தம்கவியைச் சொட்ட சொட்ட நுகரும் அன்பனை விட்டுப் பிரிய மனம் வருமா? வராது எனினும் புலவர் தம் வறுமை வாழ்வு அடிக்கடி குறுக்கிட்டு ஊருக்குச் செல்லுமாறு ஏவிக்கொண்டே இருந்தது.குமணனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கினார் புலவர்.

குமணன் அளவிறந்த பொருள்களைப் பரிசாக வழங்கினான். பீடுமிக்க பெருஞ் செல்வர் போல் வீடு புகுந்து சித்தரனாரை வியப்புடன் வரவேற்றார் மனைவியார். பருவமழை வரக்கண்ட பயிர்போல் உற்றார் உறவினர் உவகை எய்தினர். புலவர், தம் மனைவியாரை நோக்கி, "அன்புமிக்க மனைவியே, முதிரமலைத் தலைவன் குமணனன் கொடைவளம் இது. இதனை நின்னை விரும்பி வாழ்ந்து வருபவர்க்குக் கொடு. நீ விரும்பி வாழ்பவர்க்கும் கொடு; கற்பு மேம்பட்ட நின் சுற்றத்தார்க்கும் கொடு. நம் வறுமை தீருமாறு பயனெதிர் பாராது வழங்கியவர்க்கும், கைம்மாற்றாகப் பொருள் தந்தோர்க்கும் கொடு; இன்னார்க்கு என்று இல்லாமல் என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்று இல்லாமல் எல்லார்க்கும் கொடு.நானும் அவ்வாறே கொடுப்போன்" என்றார். அவ்வாறே பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து பெருவாழ்வு வாழ்ந்தார் சித்திரனார்.

நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பது வள்ளுவ நெறி அந்நெறியைச் செவ்வையாகப் போற்றி வாழ்ந்தவர் செந்தமிழ்ச் சித்தரனார். ஆகவே தாம் பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து ஈத்துவக்கும் இன்பம் எய்தினார். வாழ்க சித்தரனார்! வாழ்க அறநெஞ்சம்!

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”