உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C6

8. ஏன் புகழ வேண்டும்?

நில்லா உலகத்தில் நிலை பேறுடையது புகழ் ஒன்றே. 'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றாது நிற்ப தொன்றில்" என்பது வள்ளுவம். அப்புகழை அடைதற்கு உலகம் பெரிதும் ஆவலுற்று நிற்கின்றது. அதிலும் "புலவர் பாடும் புகழை அடையார் விண்ணுலக்கின்பமும் எய்தார்" என்னும் கருத்து சங்க நாளில் இருந்தது. ஆகவே உயர் பெருமக்கள் புலவர் பாடும் புகழை விரும்பினர். புலவர்களும் தக்கோரைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தகைய புகழ் வாழ்வு ஒன்றை இக்கட்டுரைக் கண் காண்போம்.

என்றைய புதுக்கோட்டைச் சீமை முன்னாளில் கோனாடு என்னும் பெயருடன் இலங்கியது. அவ்வூர்க்குப் பெருமைதரும் புலவர் மணியாக குமரனார் என்பார் பிறந்தார். அவர் மதுரையிலே வாழ்ந்தார்; மாடலன் என்பார் வழி முறையில் வந்தார். ஆகவே அவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனப் பெயர் பெற்றார்.

சோழனது படைத் தலைவனான ஏனாதி திருக்கிள்ளி என்பானைக் குமரனார் கண்டார். அப்பொழுது புலவர்கள் பலரும் அவனைச் சூழ்ந்திருந்தனர் அவனது சீரிய இயல்புகளையும் ஆற்றல்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏனாதியின் பகைவர்களைப் புலவர்கள் பழித்து உரைக்கவும் செய்தனர். திருக்கிள்ளி புலவர்களை நோக்கிப் புலவர் பெருமக்களே, நீங்கள் என்னையே புகழ்கிறீர்கள்; என் பகைவர்களைப் பழிக்கின்றீர்கள்; என்னிடத்தும் பழிக்கத்தக்க தன்மைகள் இருக்கக் கூடும்; என் பகைவர்களிடத்தும் புகழத்தக்க தன்மைகள் இருக்கவும் கூடும். அவற்றை உரைக்காமல் என்னையே புகழ்வது ஏன்? என் பகைவர்களையே பழிப்பதும் ஏன்? என்னைப் பழித்தாலும், என் பகைவர்களைப் புகழ்ந்தாலும் உங்களுக்குப் பரிசு கிட்டாது என்பது உங்கள் எண்ணமா? அவ்வாறு எண்ண வேண்டா. உண்மையை நான் மிக வரவேற்பேன்; மறைக்காமல் பாடுங்கள்” என்றான்.