உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

எகிப்திய மாமன்னர்களாகிய பரோவாக்கள் தமிழக வாணிகத்தில் பங்கு கொள்ளும் ஆவல் கொண்டமையால்தான் நீலாற்றுக் கால் தோண்டினர். தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல்வழியாகத் திறந்த கடல் காலாகவும், மறு பக்கத்தில் ஆற்றுடன் இணைந்த காலாகவும் அமைந்தது. அந்நாளில்தான் ‘பண்ட்' என்னும் பெயரால் பாண்டிநாடும், 'ஓபீர்' என்னும் பெயரால் உவரித் துறைமுகமும் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கின.

பரோவாக்களின் கால்வாய் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வந்தது. ஆனால் கி.மு. 7ஆம் நூற்றாண் டளவில் பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று.பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெக்கோ மன்னன் தன் பாலத்தீனப் பெருவெற்றியில் பிடித்த 1,20,000 போர்க் கைதிகளைக் கால்வாய் வேலையில் ஈடுபடுத்தினான். எனினும், அவன் அமைச்சர்கள் இப்பணியை விரும்பாமையால் திட்டம் கைவிடப்பெற்றது.

கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடுவுலக முழுவதும் பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டது. பேரரசர் டேரியசு, கால்வாயைப் புதுப்பிக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டாலும் முற்றுவிக்கப் பெறாமல் நின்றது. பேரரசர் செர்க்கிசு காலத்தில் மீண்டும் கால்வாய் சேலை தொடங்கப்பெற்று நிறை வேறியதுடன், படகுப் போக்குவரவுக்கு ஏற்ற சீரமைப்புக்களும் செய்யப்பெற்றன.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடுவுலக அரசியல், பேரரசர் அலெக்சாண்டர் கைக்குள் சென்றது. இக் கிரேக்க மரபினருள் டாலமி பிலாடெல்பசு என்பவனும் யூர்கெடிசு என்பவனும் கால்வாயை மீண்டும் சீராக்கிச் செங்கடலில் உள்ள ஆர்ச்சனா துறைமுகத்துடன் இணைத்தனர். அவ்விணைப்பை அன்றி நடுநிலக் கடலுடன் இணைக்கவும் அவர்கள் கனவு கண்டனர். ஆனால் அக்கனவு நனவாகாதலே நின்று போனது.

"செங்கடலின் நீர்மட்டத்திற்கும் நடுநிலக் கடலின் நீர் மட்டத்திற்கும் வேற்றுமை உண்டு; ஆதலால் இணைப்பு ஏற்படுத்தினால் பேரழிவு உண்டாம்" என்று அந்நாளைய மக்கள் எண்ணினர்.பரப்பியும் வந்தனர். அதனால் பலவிய அச்சமே கடலிணைப்பைத் தடைசெய்ததுடன், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தொழியவும் செய்து விட்டது. குருட்டு நம்பிக்கையின் கேட்டுக்கு வேறு சான்றும் வேண்டுமோ?