உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம்

உருவாகிய வகையை எழுதுக.

எந்தவொரு நினைவு உண்டாதற்கும், செயல் நடைபெறுதற்கும், ஏற்றவொரு தூண்டுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். அவர்கள், தூண்டல் இன்றில் துலங்கல் இல்லை என அறுதியிட்டு உரைப்பர். நாம் இக்கட்டுரையில் சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையைக் காண்போம்.

இந்தியா முதலிய கீழை நாடுகளின் செழுமையும் வளமும் மேலைநாடுகளை மிகக் கவர்ந்தன. ஆகவே கீழை நாடுகளுடன் வாணிகம் செய்து வளம் திரட்ட மேலைநாடுகள் மிக விரும்பின. அந்நாடுகளுக்கு உரிய போக்குவரவு வழி நன்னம்பிக்கை முனைவழி ஒன்றாகவே இருந்தது. அவ்வழியுங்கூட நாளடையில் பிரிட்டனுக்கு மட்டுமே உரித்தாகப் போய்விட்டது. ஆதலால் புதுவழி காணும் நாட்டம் மேலை நாட்டவருக்கு உண்டாயிற்று. அந்நாட்டத்தால் உருவாகியதே சூயசுக்கடல் இணைப்புத் திட்டமாகும்.

சூயசும் அதனை உள்ளடக்கிய எகிப்தும் பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியின் மேலாட்சிக்கு உரியனவாய் இருந்தன. துருக்கி மன்னர்க்குச் சூயசுக் கடலிணைப்புக் குறித்து ஒரு தூதுக்குழு எகிப்தில் இருந்து சென்றது. துருக்கிய மன்னர் இசை வளிக்கவில்லை. திட்டம் தொடங்காமலே நின்று போனது.

யூட்சு அலி என்பார் துருக்கியின் மன்னராக வந்த காலையில் சூயசுத் திட்டத்திற்கு ஆதரவு நல்கினார். பிரஞ்சு நாட்டு மன்னரும் இதனால் பேருவகை உற்றார். ஆனால் இத்திட்டம் வீண் செலவில் கொண்டு போய் விடும் என்று துருக்கிய நாட்டு அமைச்சர்கள் கருதினார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், கடலோடிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். எனினும் என்ன, அமைச்சர்கள் எண்ணமே நிறைவேறியது. திட்டம் நிறைவேறவில்லை. திட்டத்தை விரும்பிய அனைவரும்