உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

85

தம்பேச்சிலும் எழுத்திலும் நன்றாக வலியுறுத்திக் கொண்டு வந்தனர்.

"நம்பிக்கை முனைவழி ஒன்றே நன்மை பயப்பது" என்ற தன் கருத்தை பிரிட்டன் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. 'சூயசு வழியின் கேடுகள்' இவையென எடுத்துக்காட்டித் தடைப்படுத்தியும் வந்தது. பிரான்சு நாட்டினர் சூயசு வழியைக் காண்பதற்கு இறங்கி விடாதவாறும் பிரிட்டன் அக்கறை கொண்டது. ஆனால் கி.பி. 1798-ல் எகிப்தை வெற்றி கொண்ட நெப்போலியன் கடற்கால் இணைப்புக்குரிய திட்டங்கள் தீட்டினான். நில அளவை ஆய்வு செய்தான். இந்தியாவில் திப்பு சுல்தான் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்நிலையில் அவன் முயன்றாலும் கடல் நீர்மட்டம் தொடர்பான பழைய அச்சம் தலைதூக்கி நின்றது. நடுக்கடல் மட்டத்திலும் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவை ஆராய்ச்யிாளர் 'லெப்பேர்' முடிவு செய்தார். ஆகவே திட்டம் மீண்டும் கைவிடப்பெற்றது.

19ம் நூற்றாண்டுவரை கீழ்த்திசை அஞ்சல்கள் நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்றுகொண்டிருந்தன. 1835-ல் வாக்கார்ன் என்பார் எகிப்து நாட்டின் வழியாக அஞ்சல் அனுப்பினால் 70 நாட்கள் குறைவாகும் என்று எடுத்துக் காட்டினார். அதன் பயனாகப் புதிய அஞ்சல்வழி உண்டாயிற்று. கடலில் இருந்து மறு கடலுக்கு எகிப்திய நிலவழியில் அஞ்சல் போக்குவரவு இணைப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பே கடற்கால் திட்டத்திற்கு மிகத் துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது.

இந்நிலையில் தூய திரு சைமன் சங்கத்தார் சூயசுத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். 1846-ல் திட்ட வேலையை மேற்கொள்ள அனைத்து நாட்டுக் கழகம் ஒன்று அமைத்தனர்.திட்டவேலைக்கென மூவரடங்கிய குழுவொன்றைத் தேர்ந்தெடுத்து வேலையைப் பகுத்துத் தந்து விரைந்து நிறைவேற்றக் கருதினர்.பங்குகள் திரட்டினர். அப்பொழுதும் பிரிட்டன் இத்திட் டத்திற்கு ஆதரவு தரவில்லை!

கடற்கால் திட்டத்திற்கு எதிர்த்திட்டமாக அலெக்சாண்டிரியா கெய்ரோ - இருப்புப் பாதைத் திட்டம் ஒன்றை வகுத்து அதனை நிறைவேற்றுவதில் முனைந்து பிரிட்டன் வெற்றி கண்டது.கடற்கால் இணைப்புத் திட்டமோ படுத்துவிட்டது. எனினும் அத்திட்டத்தில் ஒருவகை வளர்ச்சியும் உண்டாகியிருந்தது.