உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

சைமன் கழகத்தைச் சார்ந்த "அன்பாந்தின்" நிறுவிய ஆராய்ச்சிக் கழகம், நீர்மட்ட வேறுபாட்டைத் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது. "நீர்மட்ட வேறுபாடு என்பது வெறும் அச்சத்தின் விளைவே அன்றி வேறன்று" என்று விளக்கிக் காட்டியது. ஆகவே, திட்ட ஆர்வமுடையவர்களுக்கு இவ்விளக்கம் ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. இத்தகு நிலைமையில் தான், பிரான்சு நாட்டுப் பெருவலியாளர் டிலெசெப்சு கடலிணைப்பு அறிக்கை ஒன்றைத் தற்செயலாகக் காணுகிறார். அத்திட்டத்தை நிறைவேற்றுவதே தம் பணியெனக் கொண்டு முழுமையாக இறங்கி வெற்றியும் காணுகிறார்!

நல்ல திட்டங்களுக்கு நாலாயிரம் எதிர்ப்புக்களும், தடை களும் உண்டானால்கூட என்றேனும் ஒருநாள் நிறைவேறியே தீரும் என்பதற்குச் சூயசுக் கடலிணைப்புத் திட்டமே சான்றாம்.

“மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து”

- திருவள்ளுவர்