உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஆண்மையில் ஆண்மை :

2 வீரன் ஒருவனைக் காணுகிறார் வள்ளுவர். அவ் வீரனையும் போர்க்களத்தில் காணுகிறார். அவனும் மற்றொரு வீரனும் ஆற்றல் எல்லாம் கூட்டிப் போரிடுகின்றனர். அவனை எதிர்த்த வீரன் சோர்வடைகிறான். அச்சோர்வை வீரன் பயன்படுத்திக் கொள்வான் போல் தெரிகிறது. போரே கொடுமையானது. அதிலும் அறநெறி தவறிய போர் மிகமிகக் கொடியது என்று கருதுகிறார் வள்ளுவர். ஆகவே "மான வீரனே! நீ வீரத்துடன் போரிட்டாய். இவனும் தாழாமல் போரிட்டான். ஆனால் இப்பொழுது தன் நிலையில் தளர்ந்து விட்டான். இதற்கு மேல் இவனுடன் நீ போர் செய்து உன் ஆண்மைக்கு இழுக்காகும். இவன் மேல் இவ்வேளையில் அருள் காட்டி உதவி செய்வது இருக்கிறதே அதுவே வீரத்திலும் வீரம். ஆன்றோர்கள் சீரிய கூர்மை பேராண்மை என்பது பேராண்மைக் களத்தில் காட்டும் அருள் ஒன்றையே ஆகும் என்பதை அறிவா யாக என்றார். உண்மை வீரன் ஆண்மையை விரும்புவானா? பேராண்மையை விரும்புவானா?

அறமிகு துறவு :

துறவுக்கோலம் உடையவன் ஒருவனைக் காணுகிறார் வள்ளுவர். அவன் தனக்கு உண்டாகிய அல்லல்களைப் பற்றி அளவிறந்து விவரிக்கிறான்.தன் துயரத்தையே தாங்கமாட்டாத இவன், பிற உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி, இன்பத்தை ஆக்க எங்கே பாடுபடப் போகிறான் என்று எண்ணுகிறார். கால்வாயைக் கடக்கமாட்டாதவன் கடலைக் கடப்பானா? வெந்நீரில் குளிக்க மாட்டாதவன் தீயில் பாய்வானா? மாட்டான். ஆதலால் அவனிடம் உரைக்கிறார்.

"துறவியே! உன்னைப்போல் தலையை மழித்துக்கொள்ள எவராலும் எளிதில் முடியும். அதனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். இவற்றைச் செய்தற்காக மட்டும் அமைந்தது அன்று தவநெறி. அதனைத் தெளிவாக அறிந்து கொள்ளாமல் அக்கோலம் கொள்வது பாவம்! அது பிறரை ஏமாற்றும் செயலாகவே அமையும். உனக்கு வரும் பசி, பிணி, ஏச்சு, பேச்சு ஆகிய எல்லாவற்றையும் பொறுக்கவேண்டும். வேண்டா வெறுப்புடன் பொறுப்பதில்

1. குறள் : 261.