உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

99

பயனில்லை. புன்முறுவலுடன் பொறுத்துக் கொள்ளவேண்டும். எவ்வுயிரேனும் உனக்குச் செய்யும் கொடுமையைக் கண்டு துடிக்கக் கூடாதது மட்டும் அன்று. அவ்வுயிருக்கு எத்தகைய கொடுமையையும் நீ நினைக்கவும் கூடாது. இத்தன்மையைக் கொள்வதே துறவு என்பதை அறிவாயாக" என்றார். தன்னலத் துறவே துறவு என்பதை அறிந்த அவன் தன் அறியாமைக்காக நாணங்கொண்டான்.

பொன் போன்ற பொறை:

வள்ளுவர் வழியைத் தெரிந்தவன் ஒருவன். அவன் வலிமை மிக்கவன்.என்றாலும் அடக்கமும் பொறுமையும் வாய்ந்தவன். அவனை இன்னொருவன் தாக்கிவிட்டான். இதனை வள்ளுவர் அறிகிறார். அவனிடம் சென்று 2 'அன்பனே! பொறுப்பாயாக! அவன் தாக்கிவிட்டான் என்று வெதும்பாது இருப்பாயாக! தாக்கியவன் இருக்கிறானே அவனுக்குச் சிறிது பொழுதுதான், 'அவனைத் தாக்கி விட்டேன்' என்னும் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் நீ தீமைக்குத் தீமை செய்யாமல் பொறுத்துக் கொண்டால் நாளும் பெருமை பெருகி வரக்காண்பாய். பகைத்தவனும் நண்பனாகக் காண்பாய்! உன் பொறுமையைக் கேள்விப்பட்ட மக்களும், ' தங்கள் பொன்னை எவ்வாறு பேணிப் போற்றிக் காப்பார்கள். பொறாதவனை அவனே முயன்று காத்துக் கொள்ள முடியாது. பொறுத்தவன் தன் காவல் இல்லாமல்கூடப் பிறரால் காக்கப்படுவான்” என்றார். இயற்கையாகவே வள்ளுவர் வழியில் நின்ற அவன்மேலும் உரத்துடன் அந்நெறியில் நின்றான்.

3

நன்மையால் நாணவைத்தல் :

நாட்கள் சில கடந்தன. எவனோ ஒருவன் நன்றாக மூட்டி விட்டிருக்கிறான். ஆகவே முன்னர்த் தாக்கியவனே மீண்டும் வள்ளுவர் வழி நிற்பவனைத் தாக்கினான்; வாய் வலிக்க ஏசினான். "பொறுமைக்கு நற்காலம் இல்லை போலும்" என்று வள்ளுவர் வழியினன் நினைத்தான். ஆனாலும் பொறுமை இழந்தான் அல்லன். அந்நிலையில் வள்ளுவர் அவண் வந்தார். “அன்பனே! அரிய நண்பனே! பொறுத்தலின் சிறப்பைச் சொல்லுதற்கு இயலாது. உன்னை மீண்டும் தாக்கினான் என்பதால் உடனே ஒரு

2.குறள் : 156.

3.குறள் : 155. 1. குறள் : 314.