உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

முடிவுக்கு வந்துவிடாதே. அவனை இப்படியே விட்டு விடுவதும் சரியன்று. அவன் திருந்துவதற்குத் தக்க தண்டனை தரவேண்டும்; அவன் வருந்தி நாணுவதற்குத் தக்க தண்டனையாகவும் தர வேண்டும்.எப்படி? அவனை நலிவு படுத்தியா? நான்கு பேர்கட்கு

டையே வைத்து ஏதேனும் இழிவு படுத்தியா? இல்லவே இல்லை. பன்முறை தீமை செய்த அவனுக்குப் பன்முறை நன்மை செய்து நாணவைக்க வேண்டும். நான் செய்த கேடுகளுக்கோ இத்தகைய நன்மைகள் என்று எண்ணி எண்ணி அவன் நைந்து நாண வைக்க வேண்டும். தீயைத் தீயால் அணைக்க முடியுமா? நீரால் தானே அணைக்க முடியும்!" என்றார்.

"பெரியீர்! உம் உரையைக் கேட்டு அன்றும், இன்றும் பட்ட துயர்கள் போதாவா? இன்னும் அவனுக்கு நான் நன்மை செய்யவும் வேண்டுமா? நன்மை செய்தால் மட்டும் திருந்திவிடுவானா? மேலும் மேலும் நன்மை பெறலாம் என்று அவன் எண்ணித் தீமை செய்யத் தொடங்கி விட்டால்...?" என்றான் துன்பத்திற்கு ஆளான அவன்.

"நண்ப! தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதைக் கடமையாகக் கொள்ளவேண்டுமே ஒழிய 'நன்மை செய்யலாமா?' என்று வினாவுவதே வேண்டாச்செயல். தாக்கியவன் சால் பில்லாதவன் என்று கருதுகிறாய். தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த விரும்புவாயானால் நீ சால்புடையவன் என்பது எவ்வாறு தகும்? சால்பில்லாதவன், சால்பில்லா ஒருவனைச் 'சால்பில்லாவன்' என்பது, குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுவதாக அல்லவா அமையும். ஆகவே நீ சால்புடையவன் என்றால் இன்னும் பொறுமையுடன் இருந்து அவனுக்கு நன்மையே செய்தல் வேண்டும்" என்று அழுத்திக் கூறினார். மேலும், அவன் தெளிவடைவதற்காக ஒரு விளக்கம் தந்தார் வள்ளுவர்.

J

1. குறள்:987 1.குறள் : 151.

2. குறள் : 1040.