உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

புவியன்ன பொறுமை:

101

சான்றோய்! ' பொறுமைக்குச் சான்றாக இருப்பது நிலம். அது தன்னை வெட்டுபவரையும் குத்துபவரையும் தாங்கி அருள் செலுத்தும் பான்மையினது. அன்றியும் தன்னைப் துன்புறுத்து கிறானே என்று எண்ணாமல் அவனுக்கு வேண்டிய வேண்டிய வளங்களை யெல்லாம் வாரி வாரி வழங்குகிறது. 2 மேலும், அது தன்னை வெட்டியும் குத்தியும் பயன் கொள்ள மாட்டாத ஆண்மை இல்லாதவனைக் கண்டு நகைக்கவும் செய்கிறது. இத்தகைய பொறுமைக்கு இருப்பிடமாம் புவியும் தாங்கமுடியாச் சுமைத் துயருக்கு ஆளாகும். எப்பொழுது என்று தெரிவாயா? என்றார் வள்ளுவர்.

'பெரியீர்! எனக்குத் தெரியிவில்லை'

என்றான் அவன்.

புவியும் தாங்காப்பொறை :

ல்லா

3 'சால்பில்லாதவர்கள் இருக்கட்டும்; இன்று விட்டாலும் இன்னொருநாள் சால்புகொள்வார்கள். ஆனால் சான்றோர்களும் தம் சான்றாண்மைத் தன்மையில் இருந்து குறைந்து விட்டார்கள் என்றால் - சால்புப்படிகளில் கால் வைத்து ஏற மாட்டாமல் கீழே இடறி வீழ்ந்து விட்டார்கள் என்றால் - அப்பொழுது இப்பெரு நிலம் தன் சுமையைத் தாங்கவே தாங்காது என்றார் வள்ளுவர். அவனுக்கு நல்ல தெளிவு பிறந்தது. வள்ளுவர்க்கு நன்றி கூறிப் பிரியாவிடை கொண்டான் அவன்.

வள்ளுவர் யாத்த குறள் மணிகளைக் கொண்டு தீட்டப்பெற்ற சில காட்சிகள் இவை. தனி மனித அமைதிக்கு இவற்றினும் வேறென்ன வேண்டும்?

3.குறள் : 990. 1. திருக்குறள் : 776.