உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

காலங்கடந்த கண்ணோட்டம்:

நாளெல்லாம் "போர் போர்" என்று முழக்கமிட்டு வாழ்ந்த மானவீரம் மல்கிய நாளிலே வாழ்ந்தார் வள்ளுவர். ' 'விழுப் புண் படாத நாள் வீண் நாள்' என்னும் வீர நிலையும், 'வீட்டுக்கு ஒரு வீரமகன் வருக' என்று பறையறைந்து போர்க் களத்திற்கு அழைக்கும் காலச் சூழ் நிலையும் அவர் முன் நின்றன. என்றாலும் அக் கால, இட எல்லைகளைக் கடந்து, உலக அமைதியில் அவர் கண்ணோட்டம் நின்றமை காணத் தக்கதாகும்.