உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அவர் பெயர் கணியன் பூங்குன்றன் என்பது! ! "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது அச்சான்றோர் வாக்கு.

தமிழர் விரிந்த பாங்கினர் என்பது இக் கணியன் பூங்குன்றன் உரையால் தெளிவாகும். அன்றியும் 2 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் திருமூலர் திருமொழியும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வள்ளுவர் வாய்மொழியும் தக்க சான்றுகளாம்.

உலக உள்ளம் :

CC

வட வேங்கடம் தென் குமரி என்னும் ஒரு நிலப்பரப்பிடை வாழ்ந்தவர்கள் தமிழ்ப் பெருமக்கள். என்றாலும், அவர்கள் உள்ளம் உலகத் தளவில் விரிந்து பரந்து கிடந்தது. தாம் வாழ்ந்த தமிழகப் பகுதியையும் 'தமிழ் கூறு நல்லுலகம்' என்று குறித்தனர். 'ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் வள்ளுவர். 'உலகம் உவப்ப' என்று திருமுருகாற்றுப் படையைத் தொடங்கினார் புலவர் தலைவர் நக்கீரனார். "மாநிலம் சேவடியாக" என நற்றிணை தொடங்குகிறது. "ஏம வைகல் எய்தின்றால் உலகே" எனக் குறுந்தொகையின் முதற்பாட்டு முடிகின்றது. இன்ன பிற சான்றுகள் பலப் பல. இத்தகைய உலகக் கண்ணோட்டம் உடைய சங்கச் சான்றோர்கள் செய்துள்ள அமைதிப் பணிகளும் பலப்பல. அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.

அமைதி நெறி:

அமைதி உண்டாக்கக் கருதுவார் இருவகை நெறிகளில் சொல்லறம் ஆற்றுவது உண்டு. ஒருவகை, அமைதிச் சூழ்நிலை ஏற்படும் போது அதனை நெஞ்சார வாழ்த்தி வரவேற்பது; மற்றொருவகை, அமைதிக் கேட்டுச் சூழ்நிலை ஏற்படும் போது வீரரினும் வீரராக அஞ்சாது நின்று அமைதிக்கேட்டுச் சூழ்நிலையை வீழ்த்துவது. இவ் விருவகை நெறிகளிலும் சங்கச் சான்றோர் பணி செய்துள்ளனர்.

முடியுடை மூவேந்தர்களுக்குள்ளும் கொள்வினை கொடுப்பி னைகள் இருந்தன. என்றாலும் அவர்கள் உள்ளம் ஒன்றி நின்று உறவு பூண்டு வாழ்ந்த குறிப்புக்கள் அரிதாகவே காணக் கிடக்கின்றன.

1.புறநானூறு: 192.

2. திருமந்திரம் : 2104

3.திருக்குறள் : 972.