உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

107

இப்பொழுது அவன் உறவு உடையோம் அல்லோம்' என்றாள். நீ அவளிடத்து அருள் செய்யாது இருப்பது கொடிது. உடனே தேர் ஏறி அவள் துயரத்தை ஒழிப்பாயாக" என்றார் பரணர்.

346

3 "மன்னவ! எமக்கு எந்தவொரு பரிசும் வேண்டா. உன் மனைவி கூந்தலில் பூச்சூடி மகிழும் வண்ணம் உன் குதிரைகள் தேரில் பூட்டப்படுவனவாக" என்று தம் அரிய பரிசை வெளியிட்டார் அரிசில் கிழார்.

4.64

'காவல்! காடுமலை கடந்து வந்து நின்னைப் பாடி நிற்கும் எங்கட்கு நீ இப்பொழுது தரவேண்டிய பரிசு ஒன்றே. அது, நின் மனைவி மகிழ்வு எய்தும் வண்ணம் இப்பொழுதே இவ்விடத்தில் ருந்து நீ புறப்படுவதே" என்றார் பெருங்குன்றூர் கிழார். பிரிந்தவர் கூடல்:

இவ்வாழ்வின் இடையே புகுந்தும் புலவர்கள் ஆற்றிய அமைதித் தொண்டு தலைமேல் கொள்ளத்தக்கதாகும். தந்நலம் கருதாப் புலவர்கள் உரையைத் தட்டிக் கழிக்காமல் பேகன் தேரில் ஏறினான். அவன் வரக் கண்ட மனைவியார் மகிழ்ந்தார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

தலைக்கு விலை :

காடு மலை கடந்து வந்தார் ஒரு புலவர். அவர் பெயர் பெருந்தலைச் சாத்தனார். வள்ளல் குமணனைக் காணவேண்டும் என்பது அவர் ஆவல். ஆனால், அவன் தன் ஆட்சியைத் தம்பிக்குக் கொடுத்துக் காடு சென்றதை அறிந்தார். காடு தேடிச் சென்று அங்குக் குமணனைக் கண்டார். கடல் விரிந்து பரந்து கிடந்தாலும் நீர்வேட்கை உடையவர் ஊற்றைத் தேடுவது தானே வழக்கு!

சாத்தனார் மிக வறுமைக்கு ஆட்பட்டவர். தம் நிலைமையைக் குமணனிடம் கூறினார். குமணனோ பாடும் புலவன் பரிசில் இல்லாமல் மீள்வதுபோல் கொடுந்துயரானது ஒன்றும் இல்லை என்று கருதினான். தன் வாளை எடுத்துப் புலவரிடம் தந்து தலையைக் கொண்டு தம் தம்பியிடம் போகுமாறு வேண்டினான். ஏனெனில், அண்ணன் தலைக்கு விலை வைத்திருந்தான் அவன் அருமைத் தம்பி!

3.புறநானூறு: 146. 4.புறநானூறு: 147.