உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தலைகாத்த தமிழ் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வாள் பெற்ற புலவர் உள்ளத்தில் ஒரு போராட்டம் கிளம்பியது. அதனைக் கொண்டே அமைதித்தொண்டு செய்ய முனைந்தார். குமணன் தம்பி இளங்குமணன் இருக்கும் அரண்மனையை அடைந்தார் வாளுடன். "வேந்தே! நிலையற்ற உலகத்தில் நிலைபெற்று வாழ விரும்பும் பெருமக்கள் தம் புகழை நிலை நிறுத்தி வைத்து இறந்தார்கள்" என்றார். அவ்வுரையால் அதற்கு முன் இருந்த பேய்த்தன்மை இளங்குமணனிடம் இருந்து விரைந்து ஓடியது. உடன் பிறப்புப் பற்று உண்டாயது. புலவர், "யான் உன் அண்ணனைப் பாடினேன். அவன் பாடிய புலவன் பரிசில் இல்லாமல் திரும்புவது நாடு இழந்த கொடுமையினும் கொடுமையானதாகும் என்று எண்ணித் தன் தலையைக் கொய்து கொள்ளுமாறு வாளைத் தந்தான். அவ் வெற்றிக் களிப்புடன் இங்கு வந்துள்ளேன்” என்றார். அதுவரை புலப்படாத அண்ணனது அருங்குணங்கள் அப்பொழுது புலப்பட்டன. ஆகவே, காட்டுக்குச் சென்று அண்ணனைக் கட்டித் தழுவி அழைத்து வந்தான். மீண்டும் மன்னவன் ஆக்கினான்; நாடு நலம் பெற்றது! வறுமைப் புலவர் சாத்தனார் தம் நிலைமையை மறந்து எத்தகைய அருமையான அமைதித் தொண்டு செய்துள்ளார்! அவர் தொண்டு வாழ்வதாக! பண்பிலாப் பகை :

காவலனும் பாவலனுமாகத் திகழ்ந்தவன் கிள்ளி வளவன். தன் குடிகளில் ஒருவனுடைய சிற்றூரைத் தேடிச்சென்று அவனை உள்ளங்குளிரப் பாடியவன் அவன். அத்தகையவனுக்குப் பகைவனாக இருந்தான் மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன்.காரியோடு கிள்ளியின் பகை நின்று விடவில்லை. காரியின் காலத்திற்குப் பின்னரும் அவன் மைந்தர் மேல் கிள்ளியின் பகை தாவியது.

கொலைக்களத்தில் கோவூரார் :

காரியின் மைந்தர் இருவரையும் கட்டி இழுத்து வர ச் செய்தான் கிள்ளி. ஊர் அறிய ஓர் இடத்தில் நிறுத்தி, யானையின் காற்கீழ்க் கிடத்தி அவர்களைக் கொல்லத் தொடங்கினான். அருளாளர் உள்ளங்களில் அரங்கொண்டு அராவுவது போல் இருந்தது இரக்கமற்ற இச்செயல். நாற்படைகளைக் கொண்டு நானிலம் ஆளுபவன் செய்யும் நயனற்ற செயலைத் தடுத்துக்

1. புறநானூறு:195