உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

உண்டியே உயிர்:

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வண்டி வண்டியாக வடநாட்டுக்கு அரிசி பருப்புக் கொண்டு சென்றான். அவர் இவர் என்று பாராமல் போர் வீரர் அனைவருக்கும் சோறு படைத்தான். உணவுக்கொடைக்கு விஞ்சிய கொடையே இல்லை. ஏனெனில் "உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தோரே" ஆவர். அதிலும் போர்க்களத்திற்குக் கொண்டுபோய் உணவுதரும் அறத்திற்கு இணையான ஓர் அறம் இருக்கவே முடியாது. அச் செயற்கருஞ் செயலை வியந்து பாராட்டுகின்றார் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர். முடிநாகர் முறையுரை :

"அசைந்தாடும் பிடரிமயிரைக் கொண்ட குதிரைகளை யுடைய பாண்டவர் ஐவருடனே துரியோதனன் முதலான நூற்று வரும் போரிட்டுக் களத்தில் மடியும் அளவும் இருபடைகளுக்கும் பெருஞ்சோறு வழங்கி உதியஞ் சேரலாதன்" என்று பாராட்டுகிறார் முடிநாகராயர்

2 "அலங்குகளைப் புரவி ஐவரொடு சினை இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்மை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்”

என்பது அவர் வாக்கு.

இந்நாளில் சாரணர் படையும், செஞ்சிலுவைச் சங்கமும் செய்யும் பணியைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்மவன் ஒருவன் செய்துள்ளான் எனின் அச்சிறப்பை மதிப்பதோடு அவன் வழிமுறைக்கு ஏற்ற செயல்களிலும் நாம் ஈடுபடுதல் வேண்டும்.

புலவர்கள், அமைதிப் பணிக்குத்துணை நின்ற பெருமக்களைப் பாராட்டியது போலவே, அமைதிப் பணிக்குத் துணையாகாதவர் களைப் பழிக்கத் தவறினார் அல்லர். 'இருவேறுலகம்' தானே

து.

3

1.புறநானூறு: 18

2.புறநானூறு: 2. 3.குறள் 374.