உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இயேசுபெருமான் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் வழங்கிய அருள் மழைக்கு அளவில்லை. அம்மழையில் சிற்சில துளிகளையாவது நாம் அறிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

'அமைதி உள்ளவர்கள்; பேறு பெற்றவர்கள்; அவர்கள் உலகம் முழுவதையும் உரிமையாகக் கொள்வார்கள்."

ל

"அமைதி உண்டாக்குபவர்கள் பேறுபெற்றவர்கள். அவர்கள் கடவுளின் மக்கள் ஆவர்.

66

'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; என்று உரைக்கப் பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையை எதிர்த்து நிற்கவேண்டா"

"ஒருவன் உன்னை வலக்கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு"

"உன்னோடு வழக்காடி உன் உடையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பவனுக்கு உன் உடையோடு மேலாடையையும் கொடுத்துவிடு.

"நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

55

"உடலைக் கொல்லுபவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டா. உயிரைக் கொல்லுபவர்களுக்கே நீங்கள் அஞ்ச வேண்டும்.

"தனக்குத் தானே பிரிந்திருந்த எந்த நாடும் பாழ்படும்; தனக்குத் தானே பகைப்பட்டிருக்கிற எந்த நகரும், எந்த வீடும் நிலை நிற்கமாட்டா."

"உடன் உடன் பிறந்தவன் உனக்குப் பகையாகிக் குற்றம் செய்தால் அவனிடத்தில் போய் நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவி கொடுத்தால் உன் உடன் பிறந்தானை ஊதியம் ஆக்கிக் கொண்டவன் ஆவாய்; அவன் செவி கொடாமல் போனால் இரண்டு மூன்று சாட்சிகளை அழைத்துச் சென்று அவர்கள் சொல்லால் நிலைபெறச் செய். அவர்களுக்கும் செவி கொடாமல் போனால் அவையோர்க்குத் தெரியப்படுத்து. அதற்கும் செவி கொடுக்காதிருப்பான் ஆனால், அவன் விலக்கப்பட்டவனாக இருப்பானாக.