உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

அறியாமை:

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

பெரிய உடலில் பெரிய உயிர் உள்ளதென்பதும், சிறிய உடலில் சிறிய உயிர் உள்ளதென்பதும்,அவர்கள் கருத்தாக இருந்தது. பழிக்குப்பழி வாங்குவதில் தனிமுதல் தன்மை வாய்ந்தவர் களாக இருந்தனர்.

கல்வியிலே அவர்கட்குக் கருத்து இல்லை. தலைவன், சட்டம், ஆட்சி, அடங்கி நடத்தல் என்பவை எல்லாம் அவர்கள் அறியாதவை.

இத்தகைய சூழலிலே நபிகள் நாயகம் பிறந்து வளர்ந்தார். அவர் கண்ணையும், காதையும், கருத்தையும் இவை துயரூட்டின. இம்மக்கள் திருந்தி இனிய அமைதி வாழ்வு வாழ வகை செய்யவண்டும், வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். இறைவன் எண்ணமும் அதுவாகவே இருந்தது. அளவிறந்த சீர்கேடு உண்டாகும் போது இறைவன் அதனை ஒழித்து நல்வழி காட்டுவதற்கு வகை செய்யத் தவறுவது இல்லையே!

வறுமையில் வாழ்ந்தார் நபிகள்; ஆனால் வறுமையைப் பொருட்டாக எண்ணாமல் வாழ்ந்தார். அவருக்குத் திருமணம் நடைபெற்றது; மனைவியார் மிகப்பெருஞ்செல்வர். ஆகவே, நபிகட்கு நற்பணி புரிதற்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார் அவ்வம்மையார்.

முறைமிக்க முதற்பணி:

நபிகள் செய்த முதற்பணி என்ன? தம்மிடம் அடிமையாக வந்த எட்டு வயதுச் சிறுவரை உரிமையாகப்போகச் சொல்லி விட்டார்.ஆனால், நபிகளின் நல்லன்புக்கு ஆட்பட்ட அவ்வடிமைச் சிறுவரோ நபிகளை விடுத்துச் செல்ல விரும்ப வில்லை. பின்னர் அச்சிறுவரின் தந்தையார் வந்து முயன்று அழைத்தார். அப் பொழுதும் நபிகளை விட்டு அகலவில்லை. அப்பொழுது மட்டு மென்ன? தம் வாழ்நாள் முழுமையும் நபிகளின் காலடியிலேயே வாழ்ந்தார். அவர்தம் அன்பார்ந்த தொண்டைப் பாராட்டுவதா? நபிகளாரின் அருளார்ந்த தகைமைப் பாராட்டுவதா? "உணவு உடைகளிலே அடிமைக்கு வேறு தமக்கு வேறு என்று வேற்றுமைப் படுத்துவது பெரும் பாவம்" என்று நாடெங்கும் பறையறைந்த நபிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பெற்ற அடிமையை எப்படிப் பேணியிருப்பார் என்பதை நாம் எண்ண வேண்டும். அடிமைத் தொண்டரின் பெயர் 'சையது' என்பது.