உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

157

காந்தியத்தின் அடியே அகிம்சை என்னும் இன்னா செய்யாமையேயாம். இன்னா செய்யாமை பற்றி இலக்கியங்களில் குறிப்புக்கள் உண்டு; காவியங்களில் செய்திகள் உண்டு; அறநூல் களிலும், சமய நூல்களிலும் சான்றுகள் உண்டு. ஆனால், அதனை அன்றாட வாழ்வுப்பணியாக்கி மக்களின் நேரிடை வாழ்வில் கலந்து கண் முன் வாழ்ந்து காட்டுபவர்கள் அருகியிருந்த காலச் சூழலில் காந்தியடிகள் தோன்றினார். தாம் கடைப்பிடித்த அகிம்சை நெறியில் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் தனி ஒருவராய் விளங்கினார். ஒரே நோக்கம் :

(C

"தனிவாழ்வின் நடைமுறை வேறு; பொது வாழ்வின் நடை முறை வேறு" என்பதே பெரும்பாலோரின் வாழ்வு என்பதை ஆய்ந்தோர் நன்கறிவர். ஆனால் தனி வாழ்வு எவ்வாறு களங்க மற்றதாக அமைய வேண்டும் என்று கருதினாரோ அவ்வாறே பொதுவாழ்வும், தாம் புகுந்த அரசியல் வாழ்வும் களங்கமற்றதாக இருக்கவே விரும்பினார் அடிகள். அவ்வாறே வாழ்ந்தார். இன்னும் ஆழமாகப் பார்த்தால் “அடிகளார்க்கு அகநோக்கம், புறநோக்கம் என இரு நோக்கம் இருந்ததே இல்லை. அவருக்கு ஒரே நோக்கமாக இருந்தது. அந்நோக்கம் அறநோக்கம் என்பதே" என உறுதியாக உரைக்கலாம்.

அடிகளார் படை மாட்சி :

-

ஆற்றல் மிக்க அரசுகளையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த ஆங்கில அரசினால் அடிகளாரின் அறப்போருக்கு - அகிம்சைப் போருக்கு ஈடுதர முடியவில்லை. நிற வெறியில் தலை நின்று கொடுமை செய்தற்கு அஞ்சாத ஸ்மட்ஸ், "தாக்குபவர்களைப் பதிலுக்குத் தாக்காமல் பொறுத்துக்கொண்டு தங்களைத் தாங்களே துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொள்பவர்களை எப்படி ஒடுக்கிவிட முடியும்?" என்று சோர்கிறார் என்றால் அடிகளார் கண்ட படைக் கருவியின் பெருமையே அது.ஆகவே தான் ஆங்கில அரசும் அவர் வழி நிற்க நேர்ந்தது.

உலகத் தலைவர் :

புகை வண்டியிலேயும், குதிரை வண்டியிலேயும், பெருந் தெருவிலேயும், வெள்ளையர் வீட்டு முற்றங்களிலேயும் காந்தியடிகள் பட்டிருக்கும் அல்லல்களுக்கு அளவுண்டா? எத்தனை