உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

159

நாடும் படையும் உடையவர்க்கும் ஆயிரக்கணக்கானோரே ஏவல் கேட்டனர்; ஆனால் நாடோ, படையோ, பதவியோ இல்லாத முழங்கால் வேட்டி முனிவர்க்குக் கோடி கோடி பேர்கள் ஏவல் கேட்கக் காத்துக் கிடந்தனரே ஏன்? அவர் காட்டிய அமைதி வழியும் அவர் செலுத்திய கரவற்ற வழி நடத்தலுமே காரணமாம். பேரொளி நேரு

காந்தியடிகளின் வழியிலே சென்றவர் உலகப் பேரொளி நேரு பெருமகனார். போர்க் குமுறல் தோன்றிய இடங்களுக் கெல்லாம் இளைக்காமல் சளைக்காமல் பறந்துசென்று அமைதிக்குப் பாடுபட்ட அந்தப் புறா உலகப் புகழை இந்தியாவிற்கு ஈட்டித்தந்தது! 'உலகை இன்று எதிர்நோக்கி இருக்கும் வினா போரை எவ்வாறு தவிர்ப்பது என்பதே"

(C

"உலகப்போர் வந்தால் அதில் எவர் தோற்பார்? எவர் வெல்வார்? என்பது முதன்மையன்று. அந்தப் போரினால் முழு அழிவே ஏற்படும்"

"உலகப்போர் பற்றி நினைப்பதற்கே அச்சமாக இருக்கிறது. அந்தப் பேரழிவை நாம் எவ்வாறேனும் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்"

இவ்வாறு பாரெங்கும் முழக்கிய அளவுடன் நில்லாமல் பஞ்சசீலக் கொள்கையையும் படைத்தார், பாரதத் தலைவர் நேரு. அக் கொள்கையைப் பல நாடுகள் வரவேற்றன; பாராட்டிப் பேசின ; பாரத நாடு நேருவின் அமைதிப்பணி கருதிப் 'பார்த் ரத்தினம்' என்னும் பட்டம் வழங்கி மகிழ்ந்தது.

இலால் பகதூர் :

"போரின் வெற்றிக்காக நாம் எவ்வளவு முழுமூச்சாகப் பாடுபட்டோமோ அதே முழுமூச்சுடன் அமைதிக்கும் பாடுபடு வோம்" என்று கூறி உருசிய நாட்டுக்குச் சென்று உருப்படியான பேச்சு நடத்தித் தம்மையே அமைதிப் பணிக்கு ஒப்படைத்தார் இளகிய உள்ளமும், எஃகனைய உறுதியும் வாய்ந்த இலால் பகதூர் சாத்திரியார்! சுருங்கிய ஆட்சிக் காலத்தில் அவர் ஆற்றிய பெருகிய தொண்டு நம்மை விட்டு அகலாது!