உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ல்லை! இவையெல்லாம் காரணங்களாக அமையவில்லை. காரணமாக இருந்ததெல்லாம் வடநாட்டின் குளிர்.

கொடும் வெப்பத்திலே வளர்ந்து திரிந்த நீக்ரோவருக்கு வடநாட்டின் குளிர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் புண்ணும் பொரிச்சலும் கிளம்பும்; இரத்தமும் நீரும் ஒழுகும்; உடனடியாகவே உலக வாழ்வை நீத்து ஒழிவார். அரும்பாடுபட்டுப் பிடித்த அடிமை பொன்னும் பொருளும் கொடுத்து வாங்கிய அடிமை செத்துக்கொண்டே இருந்தார் இழப்பு யாருக்கு? வடநாட்ட வருக்குத் தானே! இந்த இழப்பை அகற்றி வருமானத்தைப் பெருக்க வாய்ப்பாக இருந்த ஒரே ஒரு வழி அடிமைக் கட்டுப்பாடு நீக்கம்! அடிமைத் துயர்

பருத்தி எடுப்பவன் நீக்ரோ; பாறையுடைப்பவன் நீக்ரோ; குளம் தொட்டு வளம் பெருக்குபவன் நீக்ரோ ; கல்லையும் முள்ளையும் அகற்றி, கணக்கிலா வளம் தரும் நிலமாக்குபவன் நீக்ரோ ; பாலையைச் சோலையாக்கினான். பகலெல்லாம் உழைத்ததன்றி இரவும் உழைத்தான். உடலிலே களைப்பிருக்கும்; உள்ளத்திலே சோர்விருக்கும் வெளிக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது. நோயிருக்கும்; நொம்பலமிருக்கும் - வாய் விட்டுரைக்க உரிமையில்லை. கண்ணிருந்தும் குருடன்; காதிருந்தும் செவிடன்; வாயிருந்தும் ஊமை; மனிதனாய்ப் பிறந்தும் அடிமை; ஆறறிவு பெற்றிருந்தும் அறிவிலாப் பிண்டம்; விலையிடற் கேற்ற பண்டம்!

அடிமையின் வேலைக்குக் காலஎல்லை கிடையாது; அவனை ஆட்டிப் படைக்கும் ஆண்டைக்கோ இரக்கத் தன்மை கிடையாது. உழைத்து உழைத்து ஓடாய் ஒடுங்குவான். தப்பித்தவறி ஓய்ந்து நிற்பதைக் கண்காணியோ முதலாளியோ கண்டால் போதும்! கசையடிக்குக் கணக்கில்லை; உதிரம் சொட்டச் சொட்ட அடி கிடைக்கும். உதிரத்தை நக்கிச் சுவைக்க நாய்களும் தயாராக இருப்பதுண்டு. கம்பத்திலே கட்டி வைத்து அடிப்பர்! உதிரம் கொட்டும்! உயிர் போகாதவாறு பார்த்துக் கொள்ள மருத்துவரையும் உடன் வைத்திருப்பர். ஏன்? கருணையாலா? கட்டிவைத்து அடிக்கும்போது உடலில் ஒரு பக்கம்தானே அடி பட்டிருக்கும்? மீண்டும் உயிர் இருந்தால் திருப்பிக் கட்டி வைத்தும் அடிக்கலாமல்லவா! அந்தக் கருணையால் தான்!