உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

11

நீக்ரோ ஒருவன் அலறுவதைக் காணுவதிலே பண்ணை யாளர்களுக்கு அகமகிழ்ச்சி; கண்ணீர்த் துளி கொட்டுவதிலே களிப்பு; இரத்தம் சொட்டுவதிலே கொக்கரிப்பு. பற்பல சமயங்களில் நீக்ரோவை அடிப்பவன் நீக்ரோவாகவே இருப்ப துண்டு; தன்னைப் போல் அடிமையாகவிருக்கும் அவனை அடிமை ஒருவனே அடிப்பான் பண்ணையாளரின் கண்டிப்புக்காக! அடிக்க முன்வராவிட்டால் தன்னைப் பலியிட்டு விட்டுத்தான் அவன் அடிக்கப்படுவான் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அடிப்பான்; கதறிக்கொண்டும் அடிப்பான். அடிக்கும்போது அவனுக்கே தெரியும், அடிமையர் மீது அடிமையர் இரக்கம் காட்டுவதோ அன்பு. பாராட்டுவதோ மன்னிக்க முடியாத குற்றம் - கொலைத் தண்டனைக்குக் கூட வழிகாட்டிச் செல்லும் குற்றம் -என்பது. கருணை ஒருபக்கம் வாட்டும்; கண்டிப்பு ஒருபக்கம் ஓட்டும். இரண்டுக்கும் இடையே கண்காணி நீக்ரோ தத்தளித்துத் தன்னையே பலியிட்டுக் கொள்வதும் உண்டு.

பரம்பரை அடிமை

நீக்ரோவன் ஒருவனை அடிமையாக்கிவிட்டால் போதும்! அவனுக்கு உரிமை எதுவும் இல்லை என்ற உறுதி முதலாவதாக நடை முறைக்கு வரும். இரண்டாவதாக, அவனை உணர்ச்சியற்ற வனாக்கவும் கட்டளை பிறப்பிக்கப்படும். ஆணடிமை பெண்ணடி மையினிடம் உறவாடக்கூடாது. அப்படியே உறவாடினாலும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது. ஒருவேளை அடிமை நீக்ரோவுக்குக் குழந்தை பிறந்து விட்டாலும் அவர்கள் அடிமையாக இருக்கும் பண்ணைக்கு அக்குழந்தையும் அடிமை! பண்ணை யாளர்க்கு எதிர்பாராது கிடைக்கும் சொத்து! ஆம்! அடிமையரே அடிமையரை மறைமுகமாக உண்டாக்கிக் கொண்டிருந்தனர். தங்கள் பரம்பரைக்குத் தாங்களே அடிமைத் தளை பூட்டிக் கொண்டிருந்தனர்.

பண்ட மாற்றல்

நீக்ரோ ஒருவன், ஒருவனிடம் அடிமையாக்கப்பட்டுவிட்டான் என்றால் அவன் அவனிடமே சாகுமளவிற்கும் இருக்கப் போவ தில்லை. எந்த விநாடியும் மாற்றம் வரலாம், எவனாவது விலை கூட்டிக் கேட்டு விட்டால். தாய் அடிமை ஒருவனுக்கு விற்கப் படலாம்; பிள்ளையடிமை பிறிதொரு வனுக்கு விற்கப்படலாம்.