உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"ஏட்டை எரிக்கலாம்; எழுத்தை எரிக்கலாம்; இதயத்தே படிந்துள்ள கருத்தை எரிக்க முடியுமா?" என்ற எழுச்சியுள்ளம் வலுத்துக் கொண்டிருந்தது. வல்லாளர் பலரிடம். அவர்கள் வழிவழி வந்து, அமெரிக்காவிலே கப்பிக் கொண்டிருந்த அடிமைக் காரிருளை அகற்ற எழுந்த விடிவெள்ளி தான் நாம் முன்னர்க் கூறிய இளைஞன்! இளம் வயதிலேயே எண்ணத் தொடங்கி விட்டான்; இன்னல் வாழ்வையும் ஏற்கத் தொடங்கி விட்டான். புனித அமெரிக்காவிலே "பொல்லாத கறை" படிந்து விடக் கூடாது என்று புத்துணச்ச்சியோடு எண்ணினான். அவன் யார்? அவனா? அந்தச் சிறுவயதுப் பெரியவர் - அண்ணல் ஆபிரகாம் லிங்கன்!