உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பிழைப்புக்கு வழி உழைப்பே

பிறப்பும் வளர்ப்பும்

கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்த ஹார்டின் பிரதேசத்து நான்கிரீக் என்னும் ஊரில் அண்ணல் ஆபிரகாம் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று தோன்றினார். தந்தை தாமஸ் லிங்கன்! தாய் நான்ஸி கேங்ஸ்.

அமெரிக்க நாட்டு அடிமை முறையை ஒழித்துக் கட்டு வதற்காகவே பிறந்தஅருளின் செல்வர் ஆபிரகாம் காட்டுக் குடிசை ஒன்றிலே பிறந்தார்; கரடித் தோலே அவர் படுக்கை; காட்டு வெளியே கலையரங்கம்!

தாய் தந்தையர்

தந்தை தாமஸ் லிங்கன் எழுத்தறி வற்றவர். தாய் மட்டும் சிறிது படித்திருந்தாள். கணவனைப் படிக்கவைத்துவிட வேண்டும் என்ற ஆசை நான்ஸிக்கு இருந்தது. அதனால் தாமஸ் சிறிதளவு படிப்பறிவு பெற்றுக்கொண்டார்.

தாமஸ் லிங்கன் தச்சு வேலை செய்வதிலே திறம் பெற்று இருந்தார். மரம் வெட்டுவார்; அறுப்பார்; பலகை யாக்குவார்; பெட்டி செய்வார். அவர் செய்த பெட்டி என்றால் அந்த வட்டாரத்திலே பெருங்கிராக்கியோடு செல்லும். பெட்டி என்ன பெட்டி? சவப் பெட்டி! ஆம்! உலகத்தவர் உடலை அடக்கம் செய்யப்பெட்டி செய்து கொண்டிருந்த ஏழைத் தச்சன் குடிசையிலே, உலகினர் உள்ளத்தை யெல்லாம் அடக்கம் செய்ய இருக்கும் அருளாளர் வளர்ந்து வந்தார்!

தாமஸ் லிங்கனுக்கு மீன் பிடிப்பதிலே பற்று அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தூண்டிலும் கையுமாகச் சென்று மீன் பிடித்து வருவார். சிற்சில சமயங்களில் துப்பாக்கி கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வருவதும் உண்டு. இத்தகைய பொழுதுகளில் இளைஞர் ஆபிரகாம் தந்தையோடு சேர்ந்து காட்டுக்குச் சென்று

.