உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தந்தையின் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பார். ஐந்து ஆறு வயது ஆகக் கூடிய காலத்தில் தந்தைக்கு வேண்டிய சிற்று தவிகளைச் செய்யவும் முன்வந்தார்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்தவுடனே தாமஸ் லிங்கன் ஆபிரகாமையும் அவர் உடன்பிறந்த சாராவையும் அழைத்துப் பக்கத்தே வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பிப்பார். குழந்தை களுக்கு மகிழ்ச்சி அதிகமாகும். விளையாட்டு முடிந்த வுடனே தந்தையைக் கதை சொல்லும்படி வற்புறுத்துவர். தந்தையும் வேட்டையாடல், மீன் பிடித்தல், மரம் வெட்டல் ஆகிய வேலை களிடையே தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைப்பார். சுவையான கதைகளாகவும் கூறிக் கொள்வ துண்டு. வீட்டுவேலை முடிந்து விட்டது என்றால்”தந்தை மக்கள் விளையாட்டிலே" தாயும் கலந்து கொண்டு பாட்டுப் பாடுவாள்; பைபிள் (திருமறை) கதை கூறுவாள். பிள்ளைகளின் படிப்பறிவு இவ்வாறு கேள்வி வழியாகத் தொடங்க லாயிற்று.

பழங்கதை ஒன்று

"செவ்விந்தியர்கள் வெள்ளையர்களைத் தாக்கி, பொருள் களைச் சூறையாடிக் கொண்டு போவதோடு எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு அவர்கள் குழந்தைகளையும் கூடத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவது உண்டு என்று ஒருநாள் தாமஸ் விவரித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர் தம்மை அறியாதே உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டே,"ஆபிரகாம்! வர்சீனியாவிலே ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தார். அவர் இருந்த இடம் காட்டுப் பகுதி. திடீரென்று சலசலப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்க்கும்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு கண நேரத்துக் குள்ளாக "டப்" என்று குண்டுச் சத்தம் ஒன்று கேட்டது. அந்தக் குண்டும் எங்கேயோ தாக்கிவிட வில்லை. அருமைக் குழந்தைகளுடன், அன்பாகப் பேசிக் கொண்டிருந்த தந்தையின் மார்பிலே பாய்ந்தது. மண்ணிலே உருண்டு விட்டார் தந்தை! இந்நேரம் துப்பாக்கிக் கையோடு வந்த செவ்விந்தியன், அழுது கொண்டு நின்ற சிறுவனைத் தூக்கிக் கொண்டு செல்லத் தொடங்கினான். தந்தையைச் சுட்டுக் கொன்ற கொடியவனைப் பழிவாங்க வேண்டும் என்ற படபடப்பிலே ஓடிவந்த மூத்த குமாரன் ஒரே குண்டால் செவ்விந்தியனை உருட்டி விட்டான். பழிக்குப்பழி வாங்கி விட்டாலும்கூட, அப்பா மறைந்த இழப்பை