உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

17

ஈடுசெய்ய முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தனர் ஆதரவற்ற அந்தப் பிள்ளைகள்! அதற்குப் பின்னரும் செவ்விந்தியர் தொல்லை அடிக்கடி தோன்றிக் கொண்டிருப்பதை அறிந்து வர்சீனியாப் பகுதியில் இருந்த தங்கள் குடிசையை இந்தக் கெண்டகிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டு விட்டனர், என்று கதறிக்கொண்டே கன்னத்தே கோடிட்டுக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் தாமஸ். அழுதே விட்டார் ஆபிரகாம்!

"அத் தந்தைதான் தம் தந்தை" என்றும், “தூக்கிச் செல்ல விருந்த பையனே தாம்" என்றும் தாமஸ் கூறக் கூடிய நேரம் துயரத்தின் உச்சத்தை அடைந்து விட்டார் லிங்கன். தம் தந்தைக்கும் அவர் தந்தைக்கும் ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற ஏக்கம் வேறு கப்பிக் கொள்ளத் தொடங்கி விட்டது. "காலம் மாறி விட்டது; இனிமேல் செவ்விந்தியர் காலடி வைக்க முடியாது' என்று உரமூட்டினார் தாமஸ்! ஆனாலும் லிங்கன் உள்ளத்தே இந்த நிகழ்ச்சி நிலையான வடு வொன்றை ஏற்படுத்திவிட்டது. இளமைக் கல்வி

""

லிங்கன் நான்கிரீக்கில் இருந்த பள்ளிக்குச் சில நாட்கள் சென்றார். அங்குச் சரியான கல்வி கிடைக்காத காரணத்தால் தாம் குடியிருந்த இடத்திலிருந்து நான்கு கல் தூரம் சென்று கல்வி கற்க ஆரம்பித்தார். படிப்பின் மேல் தீராப்பசி லிங்கனுக்கு இருந்ததால் அவர் எத்தனை கல் தூரமானாலும் போய்வர அலுத்துக் கொண்ட தில்லை. படித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின் ஓய்ந்து ஒழிந்து இருக்க மாட்டார். படித்துக் கொண்டிருப்பார்; படித்ததைத் தரையிலோ மரப்பலகையிலோ எழுதிக் கொண்டி ருப்பார். படிக்கும் நூல் களிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள அவர் தவறுவது இல்லை.

கல்லறையில் கண்ணீர்

டு

தாமஸ் லிங்கன் வருமானக் குறைவின் காரணமாக வேறோர் ஊருக்குச் செல்ல எண்ணினார். தம் குடும்பத்தோடு சென்றார். அங்குப்போய்ச் சேர்ந்த சிறிது காலத்திற்குள்ளாக இவர்கள் வாழ்க்கையில் புயல் ஒன்று கொடிய உருவில் கிளம்பலாயிற்று. பெற்றெடுத்த அன்னை, பேரறிவுடைய ஆசிரியை, கண்ணாகக் குடும்பத்தைக் காத்து வந்த கருணைப் பிழம்பு நோய்வாய்ப் பட்டாள். நோயை நீக்குதற்குத் தாமஸ் தம்மாலானவரை முயன்றார்! ஆனால், மருத்துவர் கைவிட்டார்!

-

நான்ஸி