உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நான்ஸியின் மலர் விழி மூடியது. மூடிய விழி மீண்டும் திறக்கப் படாமலே போய் விட்டது. இல்லாளாக வந்து, கற்பிக்கும் நல்லாளாகவும் இருந்த நான்ஸியின் மறைவால்தாமஸ் கொண்ட துயரத்திற்கு அளவில்லை. இளைஞர் ஆபிரகாம் புத்தகத்தை எவ்வளவு சிக்கெனப் பிடித்துக் கொண்டிருந்தாரோ அவ்வளவுக்கு அதிகமாகத் தாயின் கல்லறையைப் பிடித்துக் கொண்டிருந்தார். கல்லறைக்குச் சென்று சென்று கண்ணீர் சொரிந்து வந்த நாட்களோ ஏராளம்.

நான்ஸியை அடக்கம் செய்தற்கான பெட்டியைத் தாமஸ் லிங்கனே அளவிட்டுச் செய்தார். உடனிருந்து பணியாற்றினார் லிங்கன். பன்னீர் தெளிக்க வேண்டிய சவப் பெட்டியில் ஏழை லிங்கனால் கண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கவே முடிந்தது. கிறித்தவச் சடங்கு முறைமையின்படி பாதிரியார் ஒருவரை அழைத்து அன்னையின் இறுதிக்கடனை முடித்தற்குக்கூட முடியாத வறுமை நிலைமையில் லிங்கன் இருந்தார்.

தாய்க்குரிய கடப்பாடு

இதனால், தம் அன்னைக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்றைச் செய்யத் தாம் தவறி விட்டதாகக் கருதினார். தாம் அறிந்திருந்த பாதிரியார் ஒருவருக்கு, அன்னைக்குச் செய்ய வேண்டிய இறுதிச் கடன்களைச் செய்து உதவுமாறு மன்றாடிக் கடிதம் எழுதினார். பாதிரியார், லிங்கனுக்கத்தாய்மேல் இருந்த பற்றையும், எழுத்து வன்மையையும் பாராட்டி இறுதிக் கடன் களை நன்முறையில் செய்துதவினார். அவ்வளவோடு நில்லாது லிங்கன் மீது அவர் கொண்ட அன்பினால் இவர் படிப்புக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யவும் முன்வந்தார். அன்னையால் தொடங்கப்பட்ட கல்வி, அன்னையின் கடிதம் காரணமாகவே வளர்க்கப்பட்டது விந்தையே!

வளருங் கல்வி

லிங்கனுக்கு ஈசாப்புக் கதைகளிலே ஈடுபாடு பெருகியது. டைவிடாது படித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்காவின் பெருமைக்குரிய முதல் மகன் வாசிங்டன் வரலாற்றை இராம்சே என்பவர் எழுதியிருந்தார். அந்நூல் லிங்கன் கைக்குக் கிடைத்தது. சிக்கெனப் பிடித்துக் கொண்டார். தமக்கு முன்மாதிரியாகக் கொண்டிருந்த பெரியவர்களுள் ஒருவராக வாசிங்டனைக் கொண்டார்.