உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

19

வயல் வெளிக்குத் தந்தையோடு செல்லும் லிங்கன், வேலை பார்த்துக் கொண்டே படிப்பார்; வேலையின் இடையேயும் படிப்பார். தரையிலே எழுதிக் கொண்டிருப்பார். தம்மை நெருங்கி வந்தவர்களிடமெல்லாம் படித்ததை எடுத்துக் கூறத் தயங்க மாட்டார். தாமஸ் லிங்கன், ஆபிரகாம் இவ்வாறு படிப்பையே முழு மூச்சாகக் கொண்டிருப்பதை வெறுத்தார். எத்தனையோ முறைகளாக அரற்றியும் வெருட்டியும் பார்த்தார். படிப்பாவலைப் பறித்தெடுக்க முடியாது என்ற காரணத்தால் தான் கண்டிப்பதை விட்டு ஒதுங்கினார்.

ஆபிரகாமின் கொழுந்து விட்டெரியும் ஆசைக்கு இந்த நூல்கள் இரையாகப் போதவில்லை. படிப்பறிவுள்ள கொல்லர் ஒருவரின் உலைக் கூடத்திற்குப் போய்த் துருத்தி ஊதிக் கொண்டும் துணை வேலைகள் புரிந்து கொண்டும் "கொல்லர் கூறக் கூடிய கதைகளைக் கேட்டுவந்தார். அறிவு கிடைக்க ஏதேனும் வழிவகை இருந்ததென்றால் எந்தத் தொல்லைப் படவும் ஆபிரகாம் தயங்க

மாட்டார்.

தாமஸ் லிங்கன் ஒரு வாரம் வேறோரிடம் போயிருந்தார். லிங்கனும் சாராவும் வீட்டில் இருந்தனர். தன்னந் தனியாக இருக்கும் இவ்வேளையில் தாயின் நினைப்பு வந்து இவர்களுக்குத் தத்தளிப் பூட்டியது. லிங்கன் சாராவினிடம், தாய் இல்லாமையால் தந்தையாருக்கும், தங்களுக்கும் ஏற்பட்ட சங்கட வாழ்க்கையை விவரித்துக் கொண்டிருந்தார். இந்நேரம் லிங்கனுக்குப் பேரிடி வீழ்வது போன்ற உணர்ச்சி ஒன்று ஏற்பட்டது. தந்தை மறுமணம் முடித்துக் கொண்டால் தங்கள் நிலைமை.

சிற்றன்னை

?

சிற்றன்னையர் கொடுமையைக் கேள்விப்பட்டிருந்த லிங்கன் ஆறாத் துயரத்திற்கு ஆட்பட்டார். இரவெல்லாம் தூக்கம் பிடிக்க வில்லை; பகல் வந்தது; குதிரை வண்டியொன்று வீட்டின் பக்கத்தே வந்து நின்றது. தாமஸ் லிங்கன் முதலாவதாக இறங்கினார். அதற்குப் பின் ஒரு பெண்மணியும் இறங்கினார். ஆபிரகாம் கண்கள் சுழல ஆரம்பித்தன. சிற்றன்னையின் கொடுமைக் காட்சிகள் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. இந்நேரம், அந்தப் பெண்மணிதான் சிற்றன்னை என்று லிங்கனுக்குத் தந்தையார் அறிமுகப்படுத்தி வைத்தார்.